Saturday, December 6, 2014

ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

சென்னை: இலங்கையில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அந்நாட்டு அதிபர் ராஜபக்சே திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்படுவதற்கு காரணமான இலங்கை அதிபர் ராஜபக்சே டிசம்பர் 9-ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்துக்கு வர இருப்பதாகவும், அடுத்த நாள் காலை சுவாமி தரிசனம் செய்ய இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.ஈழத்தில் 2,000-க்கும் அதிகமான இந்து ஆலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய அவரை திருப்பதி ஆலயத்தில் மரியாதையுடன் வரவேற்பது சாத்தானுக்கு சாமரம் வீசுவதற்கு இணையான செயலாகும். தமிழர்களின் உணர்வுகளை இதைவிட மோசமாக யாராலும் புண்படுத்த முடியாது.அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா என தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய நாடுகளில் சுதந்திரமாக நடமாட முடியாத ராஜபக்சே நினைத்தபோதெல்லாம் இந்தியா வந்து செல்ல மத்திய அரசு அனுமதிப்பது சரியல்ல. எனவே, அவர் திருப்பதி வர அனுமதிக்கக் கூடாது என் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: