Sunday, February 7, 2016

மத்திய அரசு நாடகமாடுகிறது: ராமதாஸ் பேட்டி

கெயில் பிரச்சனையில் மத்திய அரசு நாடகம் ஆடுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் நடந்த பா.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் சுப.அருள்மணி இல்ல திருமணத்தில் கலந்து கொண்ட பிறகு பேட்டி அளித்த ராமதாஸ்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளில் பா.ம.க நிச்சயம் போட்டியிடும் மற்ற தொகுதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப போட்டியிடலாம். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்றம் நிகழ்ந்தால் தான் சமூக பொருளாதாரத்தில் மக்கள் முன்னேற்றம் அடைய முடியும் அந்த மாற்றமாக அன்புமணி ராமதாஸை மக்கள் பார்க்கிறார்கள். 

கெயில் பிரச்சணையில் தமிழக அரசின் மெத்தனப் போக்கால் தான் உச்சநீதிமன்ற தீர்ப்பு மாறுபட்டதா என்ற கேள்விக்கு. உண்மை தான். எந்த பிரச்சணையில் தமிழக அரசு சரியாக செயல்பட்டிருக்கிறது. அதற்கு தான் மாற்றம் வேண்டும் என்கிறோம்.

விவசாயிகளை பாதிக்காத வகையில் கெயில் குழாய்கள் பதிக்கப்படும் என்று பொன்ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறாரே? என்ற கேள்விக்கு, சொல்வார்கள் எது நடந்திருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு சொன்னார்கள் எப்படி நடந்தது. அப்படித் தான் இதுவும். மத்திய அரசின் நாடகம் அது. இது தொடர்பாக பா.ம.க தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. இது சம்மந்தமாக சீராய்வு மனு தாக்கல் செய்வது பற்றி யோசித்து வருகிறோம் என்றார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: