மதுரை: தமிழகத்தை பொறுத்த வரை பாஜக சிறிய கட்சி தான் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி பெரிய கட்சி என்றும் அக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.மதுரை பழங்காநத்தத்தில் நேற்று பாமகவின் மகளிரணி சார்பில் மதுவிலக்கு கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பாமகவின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, தமிழகத்தில் மீண்டும் மதுவை கொண்டுவந்த திமுக மது ஒழிப்பு குறித்து பேசுவது ஏமாற்று வேலை என்று கூறினார்.
மேலும், தமிழக அரசின் மெத்தனப்போக்கால் தான் கெயில் எரிவாயு திட்டத்துக்கு விவசாய நிலங்கள் வழியாக பதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும் அன்புமணி குற்றம் சாட்டினார்.பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அன்புமணி, பாஜக தேசிய அளவில் பெரிய கட்சியாக இருந்தாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை அது ஒரு சிறிய கட்சி என்றும், பாமக பெரிய கட்சி என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment