Saturday, February 6, 2016

2016 தேர்தலில் அன்புமணி தலைமையில் அமைவது பாமக ஆட்சியாக நடைபெறாது... ராமதாஸ் திடீர் குண்டு!

சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக வெற்றி பெற்று அன்புமணி தலைமையில் நடைபெறும் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாமகவின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் மகளிர் தொண்டு நிறுவனத்தின் ஆலோசனை கூட்டம் அதன் தலைவர் எம்.ஜி.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்றது.அக்கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

அப்போது விழாவில் ராமதாஸ் பேசியதாவது
கடுமையான சட்டங்கள்... பெண்களுக்கு எதிராக எங்கு என்ன பிரச்சினை நடந்தாலும் அன்புமணி ஆட்சியில் அது தீர்க்கப்படும். அன்புமணி ஆட்சியில் பெண்களுக்கான பிரச்சினைகள் எதுவும் நடக்காது. அவ்வாறு நடந்தால் அதை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்படும்

பெண்களுக்கு முன்னுரிமை... அன்புமணி ஆட்சியில், பெண்களுக்கு எல்லா வகையிலும் முன்னுரிமை கொடுப்போம். பெண்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியுடன், வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்போம்.

முதல் கையெழுத்து... பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வேண்டும் என்றால் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும். அதை, அன்புமணி ராமதாஸ் பேசும்போதே, பா.ம.க. ஆட்சியின் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்து தான் என்று பேசினார்.

மது விலக்கு... இதை அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே கூறிவிட்டார். அதன் பிறகுதான் இப்போது எல்லோரும் மதுவிலக்கு! மதுவிலக்கு! என்று பேசி வருகின்றனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: