சென்னை: மரக்கோணம் சம்பவத்தில் அப்பாவி தொண்டர்களின் படுகொலையை மூடிமறைக்க முயன்றதற்காக முதல்வர் ஜெயலலிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் தலித்துகளுக்கும் இடையே நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.இந்தத் தீர்ப்பு மூலம் அப்பாவி இளைஞர்களின் படுகொலைக்கு நீதி கிடைத்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
மரக்காணம் படுகொலை... மாமல்லபுரத்தில் 25.04.2013 அன்று நடைபெற்ற சித்திரைப் பெருநாள் விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்த பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது மரக்காணம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு நடத்திய வன்முறை மற்றும் கலவரத்தில் செல்வராஜ், விவேக் ஆகிய இருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் செல்வராஜ் படுகொலை வழக்கை விசாரித்த திண்டிவனம் குற்றவியல் விரைவு நீதிமன்றம், இதில் குற்றஞ்சாற்றப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதன்மூலம் அப்பாவி இளைஞர்கள் படுகொலைக்கு நீதி கிடைத்திருக்கிறது
No comments:
Post a Comment