பா.ம.க. நிறுவனர் ராமதாசின் மிலாதுன் நபி வாழ்த்துச் செய்தி :
’’ இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். அண்ணல் நபிகளின் போதனையை இங்குள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தவறாமல் கடைபிடிப்பவர்கள் என்பதை சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட மழை&வெள்ளத்தின் போது அவர்கள் ஆற்றிய பணியிலிருந்தே இந்த உலகம் உணர்ந்து கொண்டது. பிறர் செய்யத் தயங்கும், முகம் சுழிக்கும் பணிகளைக் கூட இன்முகத்துடன் செய்ததன் மூலம் மனிதம் மதங்களைக் கடந்தது என்பதை இஸ்லாமிய சகோதரர்கள் நிரூபித்திருக்கின்றனர். இந்த சகோதரத்துவம் தொடர வேண்டும்.
தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். நபிகள் நாயகம் கற்பித்த இந்த போதனைக ளையும் நம் வாழ்வில் கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம் என்று கூறி வாழ்த்துகிறேன்.’’
No comments:
Post a Comment