பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் 200 வட்டங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் வரலாறு காணாத பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னையின் பல்வேறு பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளாலும், தேங்கிக் கிடக்கும் தண்ணீராலும் பொதுமக்களுக்கும், குழந்தைகளுக்கும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் ஏற்படக்கூடும்.
சென்னையில் தொற்று நோய்கள் ஏற்படுவதை தடுக்க பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் துணை அமைப்புகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சென்னையில் முதல்கட்ட மழை பெய்து ஓய்ந்தவுடன், பாமக நிறுவனர் ராமதாஸால் நிறுவப்பட்ட பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் பல இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனால் ஏராளமானோர் பயனடைந்தனர். மூன்றாம் கட்ட மழையால் சென்னை மாநகரம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், தொற்று நோய் ஏற்படுவதைத் தடுக்க சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக பசுமைத் தாயகம் சார்பில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து வட்டங்களிலும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வட்டங்களில், ஒரு வட்டத்திற்கு ஓர் இடம் என்ற அடிப்படையில் இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. நாளையும், நாளை மறுநாளும் (12.12.2015, 13.12.2015) காலை 8.00 மணி முதல் மாலை வரை நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் செயல்படும்.
சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நில வேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை நாளை காலை நானும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி அவர்களும் தொடங்கி வைக்க உள்ளோம். இம்முகாம்கள் மூலம் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயனடைவார்கள். தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்திலும் இத்தகைய நில வேம்பு கசாயம் வழங்கும் முகாம்கள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment