’’தமிழ்நாட்டை சீரழித்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவு கட்டும் வகையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும் 2016 ஆம் ஆண்டை வரவேற்போம்; 2015 ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் என்ற நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டம் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள மாங்கனி அரங்கில் வரும் 31-ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. முதல மைச்சர் வேட்பாளர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே. மணி, பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளும், பா.ம.க.வின் பல்வேறு அணிகள், துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.’’
No comments:
Post a Comment