இந்திய குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரீனாவில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவர்னர் ரோசைய்யா கொடி ஏற்றினார். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீர,தீர செயல் புரிந்தோருக்கு அண்ணா விருது வழங்கினார்.
இவ்விழாவில் கலைநிகழ்ச்சிகளூம், கண்கவர் அலங்கார ஊர்தி அணிவகுப்பும் நடைபெற்றன. இந்த ஊர்திகளில் தற்போதைய முதல்வர் படம் இருக்க வேண்டிய இடத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இருந்தது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’ குடியரசு தினவிழா அணிவகுப்பில் ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவின் உருவப்படங்கள் இடம் பெற்றது அவமான கரமானது; இந்தியாவுக்கு இழுக்கு’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment