தமிழ்நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு ஊழல்கள் அதிகரித்து விட்டன. அதுமட்டுமின்றி, கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை தொடர்பான விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை தவிர மற்ற ஊழல்கள் குறித்த தகவல்களையும் திரட்டியுள்ள பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் 04.02.2015 புதன்கிழமை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி ஆகியோர் உள்ளிட்ட தலைவர்கள் அடங்கிய பா.ம.க. குழு சென்னை கிண்டியிலுள்ள ஆளுனர் மாளிகையில் ஆளுனர் ரோசய்யாவை சந்தித்து அ.தி.மு.க. அரசின் ஊழல்கள் பற்றி விசாரணை ஆணையம் அமைக்கக் கோரும் மனுவை அளிக்க உள்ளது. இவ்வாறு பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment