Sunday, December 14, 2014

மாற்று அணிக்கு முயற்சித்து வருகிறோம்... டாக்டர் ராமதாஸ்

கிருஷ்ணகிரி: 2016ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மாற்று அணியை அமைத்து மக்களை சந்திக்க பாமக முயற்சித்து வருவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 
கிருஷ்ணகிரிக்கு வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில், பா.ம.க. தலைமையில் 2016-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அரசியல் மாற்றத்திற்கான அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். மது, ஊழல் ஒழிப்பு ஆகியவற்றை முன் நிறுத்தி பிரசாரம் செய்வோம்.தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும். இதன் மூலம் ஒவ்வொரு சமுதாயத்தையும் பொருளாதாரத்தில் முன்னேற்ற முடியும். பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டாம் என எங்கும் கூறவில்லை. பெண்களுக்கு திருமண வயது 21 என நிர்ணயம் செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பிற்கு பின் பெற்றோர் சம்மதத்துடன் பெண்கள் தங்களது வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர் பட்டுசேரி பகுதியில் பாம்பாற்றின் குறுக்கே 3 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்க புதிய தடுப்பணை கட்ட மத்திய புவியியல்துறை அனுமதி அளித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பே இதை கண்டித்து திருப்பூர் மாவட்டத்தில் பா.ம.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது. புதிய தடுப்பணை கட்ட அனுமதிக்கக் கூடாது.கடந்த 2003-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் அமைத்து விளம்பரம் செய்வது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நிதி சீர்கேடு நடந்துள்ளது. இது போக்குவரத்து கழக பொருளாதாரத்தில் அமிலத்தை ஊற்றி அழிக்கும் செயலாகும். உச்சநீதிமன்றம் வெளிப்படையான நடைமுறை இல்லை என கூறி இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இது அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளதற்கு ஒரு உதாரணமாகும்.மத்திய அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்கக்கூடாது. தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம், கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்து, வறுமை குறைந்துள்ளது. இத்திட்டத்தை வேளாண், விவசாய பணிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யர் சென்னை திருவல்லிக்கேணியில் வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக அறிவித்து பராமரிக்க வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அந்த வீடு இடிக்கப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றார் ராமதாஸ்.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-attempts-make-3rd-front-says-dr-ramadoss-216978.html?utm_source=article&utm_medium=fb-button&utm_campaign=article-fbshare

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: