பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த இனப்படுகொலைகாரன் ராஜபக்சே திருப்பதி வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அங்கு நடந்த போராட்டங்கள் குறித்து செய்தி செகரித்த தமிழக செய்தியாளர்களை ஆந்திரக் காவல்துறையினர் கடுமையாக தாக்கி கைது செய்திருக்கின்றனர்.
ராஜபக்சே வருகை மற்றும் போராட்டம் குறித்து செய்தி செகரிக்க தமிழக ஊடகங்களுக்கு முதலில் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதையும் மீறி தங்களின் கடமையை செய்தவர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
போர்க்களங்களில் கூட செய்தியாளர்கள் செய்தி செகரிக்க வசதி செய்து தரப்படும் நிலையில், எவ்வித காரணமும் இல்லாமல் தமிழக செய்தியாளர்களை தாக்கிய ஆந்திர காவல்துறையினரின் நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது. இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது ஆந்திர அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’
No comments:
Post a Comment