காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் பா.ம.க. வின் வன்னியர் சங்கம் சார்பில் வருகிற ஏப்ரல் 25-ந்தேதி சித்ரா பவுர்ணமி அன்று வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடை பெற உள்ளது. இம்மாநாடு நடைபெற உள்ள மாமல்லபுரம் கடற்கரை பகுதிக்கு முன்னாள் மத்திய மந்திரியும், பா.ம.க. இளைஞர் சங்க செயலாளருமான அன்புமணி ராமதாஸ் நேரில் சென்று விழா ஏற்பாடுகள் குறித்து பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அன்புமணி
செய்தியாளர்களிடம், ’’மாமல்லபுரத்தில் நடை
பெற உள்ள சித்ரா பவுர்ணமி வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தமிழக அரசியலில் ஒரு
திருப்புமுனை மாநாடாக அமையும். இம்மாநாட்டில் உத்தரபிரதேச முதல்-மந்திரி
அகிலேஷ்யாதவ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழகம் முழுவதும் இருந்து ஒரு
கோடி வன்னியர்கள் குடும்பத்துடன் மாநாட்டில் பங்கேற்கின்றனர். தமிழகத்தை வன்னியர்
ஆள வேண்டும் என்ற முழக்கத்துடன் இம்மாநாடு நடைபெற உள்ளது’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment