|
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து படம் பிடிப்பதற்காக சென்ற 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புகைப்படக்கலைஞர் ஆல்பின் மேத்யூ அங்கிருந்த பேராசிரியர் மய்யா மற்றும் பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
எங்கு தவறு நடந்தாலும் அதை வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஊடகங்களுக்கு உள்ளது. ஐ.ஐ.டி. மாணவியின் தற்கொலை தொடர்பாக பல்வெறு ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அது பற்றிய படங்களை எடுப்பதற்காக மேத்யூ அங்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை பேராசிரியரும், பாதுகாவலர்களும் போக்கிலிகளைப் போல சூழ்ந்துக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இத்தாக்குதல் தொடர்பான வழக்கில் 3 பாதுகாவலர்களை கைது செய்த காவல்துறையினர் , முக்கிய எதிரியான பேராசிரியர் மய்யாவை கைது செய்யத் தயங்குவதும், அவரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினால் புகைப்பட கலைஞரையும் கைது செய்யவேண்டியிருக்கும் என்று பத்திரிகையாளர்களையே காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்திற்குரியது. இத்தாக்குதலுக்கு காரணமான பேராசிரியர் மய்யாவை உடனடியாக கைது செய்யவேண்டும்.
அண்மைக்காலமாகவே ஊடகத்துறையினர் மீதான தாக்குதல் அதிகரித்திருக்கிறது. மதுரை மற்றும் சென்னையில் குவாரி ஊழல்கள் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின் பத்திகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment