பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், ‘’மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் கூறி உள்ளார். அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் நிறைய முறைகேடுகள் நடந்து இருக்கின்றன. இதை கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கிரானைட குவாரிகள், மணல் குவாரிகள், ஜல்லி குவாரிகள் ஆகியவற்றை முறைப்படுத்தி உரிய கட்டணம் வசூலித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரை வருமானம் வர வாய்ப்பு உள்ளது. வருமானத்துக்குத்தான் டாஸ்மாக் கடையை நடத்துகிறோம் என்று சொல்லும் அரசு குவாரிகளை முறைப்படுத்தினால் அதன் மூலம் வரும் வருமானத்தால் டாஸ்மாக் கடையை மூடி விடலாம்.

|
பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து இருந்தால் மாணவ- மாணவிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து இருக்காது. மாணவர் உயிரிழந்தால் ஒரு லட்சம் நிதி கொடுப்பது போதாது. இந்த நிதி உதவியை உயர்த்த வேண்டும்.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முடக்க காநாடக அரசு சதி செய்து வருகிறது.
இந்த சதியை முறியடிக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.
No comments:
Post a Comment