Monday, March 5, 2012

2016ல் வன்னியர் ஆட்சி மலர்வதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது': ராமதாஸ்

செஞ்சி: ""தமிழகத்தில் வரும் 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நடந்த திருமண விழாவில் அவர் பேசியதாவது:
வன்னியர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., பின்னால் இருக்க கூடாது. இந்த கட்சிகளை வேர் அறுக்க வேண்டும். 2016ல், வன்னியர் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுப் போடும் ஜென்மங்களாக நம்மை வைத்திருந்தது போதும். நாம் வாழ குலக்கொடியை உயர்த்தி பிடிப்போம். அதுவரை உறக்கம் இல்லை; ஓய்வு இல்லை. 15, 18 வயதுடைய எல்லோரும் மாமல்லபுரம் வர வேண்டும். பா.ம.க.,வில் சேர்ந்து மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட வேண்டும்.எங்களுக்கு வேறு யாரும் தலைவர்கள் கிடையாது. எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் தலைவர்களாக இருக்க முடியும். திராவிட கட்சிகள் இலவசத்தையும், சினிமாவையும், சாராயக் கடையையும் தான் தந்தனர். கழகங்களின் மாய்மாலம் இனி மேலும் செல்லாது.

நான்கு ஆட்டு குட்டியை கொடுத்து வளர்த்து கொள்ள சொன்னால், அது வளர்ந்து உடனே நகைக் கடையும், துணிக் கடையும், ஓட்டலும் நடத்தும் அளவிற்கு உயர்ந்து விடுவர் என ஏமாற்றுகின்றனர்.1980களில் வன்னியர்கள் கண்ணை மூடிக்கொண்டு வந்ததை போல், இப்போது தி.மு.க., - அ.தி.மு.க.,வை விட்டு, என் பின்னால் வர வேண்டிய நேரம் வந்து விட்டது.எல்லோரும் ஓடி வாருங்கள்; 2016ல் கழகங்களை மூட்டை கட்டி போடப் போகிறோம். அவர்களை வீட்டுக்கு அனுப்ப போகிறோம். புதிய அத்தியாயம், புதிய அரசியல், புதிய பாதை, புதிய நம்பிக்கையை வன்னியர்களுக்கு மட்டும் அல்லாமல் தமிழக மக்களுக்கும் சொல்கிறோம். மானம், ரோஷம், சூடு, சொரணை அதிகம் உள்ளவர்கள் யார்? நீங்களே பதில் சொல்லுங்கள். இவர்கள் எல்லாம் மற்ற கட்சியிலா இருக்க வேண்டும்.

ஒருங்கிணைந்த தென் ஆற்காடு மாவட்டமாக இருந்த போது நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தியும், உங்கள் ஊர்காரரும் (செஞ்சியார்) சந்து பொந்து, மூளை முடுக்கெல்லாம் சென்று தி.மு.க.,வை வளர்த்தனர்.இப்போது விழுப்புரத்தில் ஒருவன் கேட்கிறான் (பொன்முடியை மறைமுகமாக குறிப்பிட்டு) உங்கள் ஊர்காரரை யார் என்று? அவர் யார் என்பதை நீங்கள் தான் ஞபாகப்படுத்த வேண்டும்.அடுத்தவர்களின் கொடியை பிடித்ததால் கோழைகளாக மாற்றப்பட்டோம். இப்போது நம்மை வெளிக்காட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது. இதுவரை தமிழகத்தில் 30 முதல்வர்கள் இருந்தனர். 10 நாள் கூட ஒரு வன்னியர் முதல்வராக இருந்ததில்லை.

இதுவரை வன்னியர்களுக்கு கழகங்களில் என்ன பதவியை கொடுத்தனர்; ஒன்றிய செயலர், சேர்மன், கவுன்சிலர், கிளை செயலர் பதவியைத் தவிர எதையும் கொடுக்கவில்லை. இதையெல்லாம் நான் வயிற்றெரிச்சலில் சொல்லவில்லை. 2016ல் வன்னியர் ஆட்சி மலரும்; அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. இதை நோக்கி நம் பயணம் தொடரட்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: