Sunday, March 11, 2012

லோக்சபா தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டி

சேலம்:""வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிட உள்ளது. திராவிட கட்சிகள், தேசிய கட்சிகள், எங்களைப் போல் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவிக்க முடியுமா, அதற்கு தைரியமிருக்கிறதா?'' என்று, அன்புமணி ராமதாஸ் சவால் விடுத்துள்ளார்.சேலத்தில், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஒவ்வொரு மாவட்டத்திலும், பா.ம.க.,வில் இளைஞர்கள் மற்றும் பெண்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையும், லோக்சபா தேர்தலுக்கான பொறுப்பாளர் நியமனமும் நடந்து வருகிறது. பா.ம.க.,வின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்து சென்று கூறுங்கள் என, அவர்களிடம் வலியுறுத்துகிறோம்.மத்தியபிரதேசம், இந்தூரில், தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில், அனைத்து உயர் அதிகாரிகளும், கையெழுத்திட்ட பின் தான், நான் கையெழுத்திட்டுள்ளேன். ஊடகங்கள் தான், அவற்றை பெரிதுபடுத்துகின்றன.வரும் லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: