Saturday, March 17, 2012

காடுவெட்டி குரு வேண்டுகோள்

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் மே 5-ந்தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு விளக்க பொதுக் குழு கூட்டம் வன்னியர் சங்கம் மாநில தலைவர் சிட்டி பாபு தலைமையில் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார், தெற்கு மாவட்ட செயலாளர் வேணுபுவனேஸ்வரன், மாவட்ட தலைவர் ஆடியபாதம், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் செந்தில்முருகன், மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் தங்கத்துரை, மாவட்ட தலைவர் சேகர், பழனிசாமி, செல்வமகேஷ், தமிழ்செல்வி, இளமாறன், கிருஷ்ணகுமார், பாஸ்கர், ராஜேந்திரன், பசுமை தாயகம் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, வன்னியர் சங்க மாநில தலைவரும், ஜெயகொண்டம் சட்டமன்ற உறுப்பினருமான செ.குரு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.மாவட்ட துணை பொதுச் செயலாளர் திருஞானம் வரவேற்று பேசினார்.

குரு எம்.எல்.ஏ., ’’வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து நின்றாலும் வெற்றி பெறும். நமது வன்னியர் குல சமுதாய மக்களின் மீது என்றும் அக்கறை கொண்டும், அயராது பாடுபடும் ஒப்பற்ற ஒரே தலைவர் நமது இனமான காவலர் டாக்டர் ராமதாஸ் மட்டும் தான்.

தமிழகத்தில் நாம் பெரும்பான்மையாக மக்கள் வாழ்ந்தும், சாதிக்க முடியாத நிலையில் உள்ளோம். அதற்கு காரணம் நமது ஒற்றுமையின்மை தான். அதனை தவிடுபொடி யாக்கும் அளவிற்கு இந்த மாவட்டத்தில் லட்சக்கணக் கா

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: