நாமக்கல் நகராட்சி திருமண மண்டபத்தில், பா.ம.க., பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், ‘’தமிழகத்தில், மிக மிக வேகமாக வளரும் கட்சி, பா.ம.க., மட்டும் தான். இளைஞர்கள் அதிகம் உள்ள ஒரே கட்சி, பா.ம.க., மட்டும் தான். சில கட்சிகளில், 60 வயதைக் கடந்த சீனியர் சிட்டிசன்கள், இளைஞர் அணி நிர்வாகிகளாக உள்ளனர்.
நாங்கள் எது செய்தாலும் புதுசா செய்வோம். தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.,- அ.தி.மு.க., மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.
மின்சாரம் இல்லாததால், தமிழகம் தற்போது இருண்டு கிடக்கிறது. எங்களுக்கு ஒரே ஒரு ஆண்டு மட்டும் வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள், நாங்கள் மாற்றிக் காட்டுவோம். தி.மு.க., முடிந்துபோன கட்சி.
அக்கட்சியில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை பிரச்சனை உள்ளது. அ.தி.மு.க., திரும்ப வராது. காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.
சினிமா கலாச்சாரம் என்று ஒழியுதோ, அன்று தான் தமிழகம் உருப்படும். லோக்சபா தேர்தலில், பா.ம.க., தனித்துப் போட்டியிடும். அடுத்து வரும் சட்டசபை தேர்தலிலும் பா.ம.க., தனித்து நிற்கப்போகிறோம்’’என்று கூறினார்.
Saturday, March 10, 2012
நாங்கள் எது செய்தாலும் புதுசா செய்வோம் : அன்புமணி ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment