Wednesday, March 28, 2012

2016ல் பா.ம.க. ஆட்சி! டாக்டர் ராமதாஸ் பேச்சு!

சென்னை வேளச்சேரி பகுதி பா.ம.க. சார்பில் புதிய

அரசியல் புதிய நம்பிக்கை' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.


அவர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 45 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் ஆட்சியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். நாட்டில் எல்லா பொருட்களும் 60 சதவீதம் விலை உயர்ந்து வருகிறது. ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களின் விலை மட்டும் 10 சதவீதம் தான் உயர்ந்து உள்ளது.


தமிழகத்தில் இலவச அரிசி தரவேண்டும் என்பதால் விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர். நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயத்திற்கு அரசு எந்தவித முன்னுரிமையும் வழங்காததால் விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன.


இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சீரமைப்பு என்ற பெயரில் வீடுகள் கட்டி அவை தமிழர்களை விட சிங்களர்களுக்கு தான் வழங்கப்படுகின்றன. நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காததால் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பா.ம.க. பல திட்டங்களை வைத்து உள்ளது.


தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விட்டது. 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் நம்மிடம் 7,500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உள்ளது. கூடங்குளத்திலும் முதற்கட்டமாக 640 மெகாவாட் மின்சாரம் தான் உற்பத்தி செய்ய முடியும். இது பற்றிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிடவேண்டும். 2016 ம் ஆண்டு தமிழகத்தில் பா.ம.க. ஆட்சி ஏற்படும். இனி யாருடனும் கூட்டணி கிடையாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த பா.ம.க.வினர் தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: