பென்னாகரம்: பென்னாகரம் தொகுதியில் இன்று குடிநீர்ப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. மக்களுக்கு தண்ணீர் கொடுக்காத திமுகவுக்கு பென்னாகரம் வாக்காளர்கள் தண்ணீர் காட்ட வேண்டும். திமுக வென்றால் அராஜகம்தான் தலை விரித்தாடும் என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
பென்னாகரத்தில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்த்து. கடைசி நாளான நேற்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்டோர் கடைசிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பாமக சார்பில் நேற்று மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது. ஜி.கே.மணி தொடங்கி வைத்த அந்த ஊர்வலத்தில், டாக்டர் ராமதாஸ் ஆவேசமாக பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், பென்னாகரம் தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த பெரியண்ணன், இத்தொகுதி மக்களுக்கு என்ன செய்துள்ளார். பெரியண்ணன் நல்லது செய்தார் என யாராவது கூற முடியுமா?.
ஐந்து ஆண்டு முதல்வராக இருந்தும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை; அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று பிரசாரத்துக்கு வந்த முதல்வர் கூறியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு, 'நான் உங்களிடம் ஓட்டு கேட்க வரவில்லை. புதிய சட்டசபை கட்டடத்தை வந்து பாருங்கள்; நீங்கள் வரவில்லையென்றால், இன்பசேகரனையாவது அனுப்பி வையுங்கள்' என கூறியுள்ளார்.
இன்னும் 50 ஆண்டுகளுக்கு நல்ல முறையில் இருக்கும் தலைமைச் செயலகத்தை விட்டு, அவசர கதியில் புதிய சட்டசபை கட்டடத்தை கட்டி வைத்துள்ளார்.
சாதனையைச் சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை. அதைப் பற்றி தான் சொல்வதற்கில்லையே.
புறம்போக்குகள் சொல்கிறார்கள்...
பா.ம.க. ஆட்டம் கண்டு விட்டது, அமைதியாகி விட்டது என புறம்போக்குகள் சிலர் கூறுகின்றனர். இப்போது சொல்கிறேன்; தி.மு.கவை அழிப்பது தான் என் முதல் வேலை. ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதி, இத்தொகுதி மக்களை பிச்சை எடுக்க வைத்துள்ளார். சாதனையை சொல்லி ஓட்டு கேட்காமல், சாராயத்தையும், பணத்தையும், மூக்குத்தியையும் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர்.
எல்லா மக்களையும் குடிகாரர்களாக ஆக்கி விட்டனர். தமிழ்நாடு குடிகார நாடாக மாறிவிட்டது. கருணாநிதியை யாரும் மன்னிக்க மாட்டார்கள்; மன்னிக்கவும் கூடாது.
சட்டசபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏக்கள், ஆறு அமைச்சர்கள், பா.ம.க. தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றனர். இப்போது கூறுகிறேன்; தி.மு.கவுக்கு மூன்றாவது இடம் தான் கிடைக்கும். தண்ணீர் கொடுக்காத தி.மு.கவுக்கு, பென்னாகரம் வாக்காளர் கள் தண்ணீ காட்ட வேண்டும். அக்கட்சிக்கு ஓட்டு போட்டால், அராஜகம் தான் தலை தூக்கும்.
படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. பாமரர்களுக்கும் வேலை இல்லை. இவற்றையெல்லாம் மறைக்க, ஆளும் கட்சியினர் பணத்தைக் கொட்டி வாக்காளர்களையும், மாற்றுக் கட்சி நிர்வாகிகளையும் விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனினும் இதையும் மீறி தோற்றுப் போவோம் என்ற பீதி ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, பா.ம.கவுக்கும், தி.மு.கவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக வதந்திகளைப் பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகம் உயிரோடு புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே ஜனநாயகத்தை வீழ்த்த முயல்வோரைப் பென்னாகரம் வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும்.
வாக்களிப்பது மிகவும் ரகசியமானது. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எனவே, பணம் வாங்கி விட்டோம் என்று கருதாமல், மனசாட்சியின்படி வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
Friday, March 26, 2010
தண்ணீர் கொடுக்காத திமுகவுக்கு தண்ணீர் காட்ட வேண்டும்-ராமதாஸ் ஆவேசம்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment