Saturday, March 6, 2010

மக்கள் டிவி மீதான தாக்குதல் கண்டனத்துக்குரியது-பாஜக

சென்னை: மக்கள் டிவி மீது நடத்தப்பட்ட தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது என்று பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியலில் பல்வேறு கொள்கைகள் இருப்பதும், அதையொட்டி கருத்துக்கள் தெரிவிப்பதும், விமர்சிப்பதும் இயல்பானது. ஆனால் சமீப காலமாக அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கு மீடியாவின் செய்திகளுக்கு அவற்றின் அலுவலகங்களை முற்றுகையிடுவதும், கட்சி அலுவலகங்களை தாக்குவதும் அதிகரித்து வருவது கவலையளிக்க கூடியது மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியது.

ஜனநாயக நெறிமுறைகளை தாண்டிய வன்முறை அரசியல் கட்சி தொண்டர்கள் இடையே ஒழுங்கையும், நல்லிணக்கத்தையும், குழிதோண்டி புதைப்பதாக உள்ளது. வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை அனைத்து அரசியல் கட்சிகளும் கட்சி வேறுபாடுகளை தாண்டி கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வேலூர் சிறையில் அடைப்பு...

இதற்கிடையே, மக்கள் டிவி அலுவலகம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீதான தாக்குதல் தொடர்பாக கைதான 99 பாமகவினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனைவர் மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: