Monday, December 28, 2009

திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர்-ராமதாஸ்

கிருஷ்ணகிரி: கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும்,அதிமுகவும் கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மாநாடு அந்த நகரில் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,

தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள ஜாதிகளில் வன்னியர்கள் தான் அதிகம்.

ஆனால் இட ஒதுக்கீடு, மற்றும் வேலைவாய்ப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் வன்னியர்கள் இருந்து வருகின்றனர். எனவே தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இதனால் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக தைலாபுரத்தில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி கோவிலை உருவாக்கி வருகிறோம். இதில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள இலவசமாக கல்வி வழங்கி வருகிறோம்.

ஆனால் தமழகத்தில் வன்னியர்கள் ஏமாற்றபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நான் 1980ல் இருந்து தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

குறைந்த மக்கள் தொகை உள்ள ஜாதியினர் தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் நமது ஜாதியினர் அதிகமாக இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டனி அமைத்து கொண்டு திட்டமிட்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடாமல் செய்து விட்டனர். இதனால் தான் நாங்கள் 7 இடங்களிலும் வெற்றி பெரும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.

ஆனாலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்தும் பாடுபடுவோம் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: