Friday, December 11, 2009

ஆங்கில வழி கல்விக்கு கருணாநிதி ஆதரவு-பாமக

சென்னை: சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்​து​வ​தற்​கான தமி​ழக அர​சின் நட​வ​டிக்​கை​கள் ஆங்​கில வழி கல்​விக்கு அதிக முக்​கி​யத்​து​வம் தரு​வ​தாக உள்​ளதாக பாமக நிறு​வ​னர் டாக்டர் ராம​தாஸ் குற்​றம ​சாட்​டி​யுள்​ளார்.​

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில்,

அ​னைத்து குழந்​தை​க​ளும் ஒரே வித​மான கல்வி முறை​யில் பயில வேண்​டும் என்ற நோக்​கி​லான சமச்​சீர் கல்வி முறையை அமல்​ப​டுத்த,​​ தமி​ழக அரசு சில நட​வ​டிக்​கை​களை மேற்​கொண்​டுள்​ளது.​

ஆனால் கல்​வியை தனி​யார் மயம்,​​ வணிக மய​மாக்​கும் ஆங்​கில வழி​யி​லான கல்​விக்கு முக்​கி​யத்​து​வம் அளிக்​கும் வகை​யில்,​​ அர​சின் நட​வ​டிக்​கை​கள் அமைந்​துள்​ளன.​

பெ​ரும்​பா​லான மாண​வர்​கள் மாநில அர​சின் பாடத்​திட்​டத்​தின் கீழ்,​​ தமிழ் வழிக் கல்வி பயின்று வரு​கி​றார்​கள்.​ இதில்
நான்​கில் ஒரு பகு​திக்​கும் குறை​வா​ன​வர்​களே ஆங்​கில வழிக் கல்வி நிலை​யங்​க​ளில் படிக்​கின்​ற​னர்.​

வசதி படைத்​த​வர்​கள்,​​ சமு​தா​யத்​தில் மேல்​தட்​டில்
இருப்​ப​வர்​க​ளின் குழந்​தை​கள்​தான் ஆங்​கில வழி,​​ கட்​ட​ணப் பள்​ளி​க​ளில் படிக்​கின்​ற​னர்.​

அ​னை​வருக்​கும் சம​மான,​​ தர​மான கல்​வியை வழங்​கும் சமச்​சீர் கல்​வியை நடை​மு​றைப்​ப​டுத்​து​கி​றோம் என்று அரசு அறி​வித்​தது.​ ஆனால் மிகக் குறைந்த எண்​ணிக்​கை​யி​லான மாண​வர்​க​ளுக்கு பயன்​பட்டு வரும் கட்​ட​ணப் பள்​ளி​க​ளும்,​​ ஆங்​கில பயிற்று மொழி​யும் தொடர்ந்து நீடிக்​கும் என்று அறி​வித்​தி​ருப்​பது சமூக நீதிக்கு எதி​ரா​னது.​ அர​சி​யல் சட்​டத்​திற்​கும் எதி​ரா​னது.

6 முதல் 14 வயது வரை​யி​லான எல்லா குழந்​தை​க​ளுக்​கும் கட்​டாய,​​ இல​வச கல்வி அளிக்க வேண்​டும் என்​பது சட்​டம்.​ ஆனால்,​​ ஆங்​கில வழி​யி​லான கட்​ட​ணப் பள்​ளி​கள் நீடித்து வரும் நிலை​யில்,​​ அனை​வ​ருக்​கும் இல​வ​சக் கல்வி என்​பது எவ்​வாறு சாத்​தி​ய​மா​கும்?​.

ஆங்​கில வழிக் கல்​விக்கு ஆத​ர​வான கருத்​து​களை முதல்​வர் கரு​ணா​நி​தி​யும் தெரி​வித்​துள்​ளார்.​ இது வேதனை அளிப்​ப​தாக உள்​ளது.​

அண்​ணா​வின் இரு​மொ​ழிக் கொள்​கையே எங்​க​ளது கொள்கை என்று அறி​வித்​துள்ள முதல்வர் கரு​ணா​நிதி,​​ இரு​மொ​ழிக் கொள்​கை​யில் இடம்​பெ​றாத ஒரு கருத்து திணிப்​பை​யும் வெளி​யிட்​டி​ருக்​கி​றார்.​

தாய் மொழி​யில் மட்​டும் சமச்​சீர் கல்​வியை கொண்டு
வரு​வ​தன் மூலம் எந்த அள​வுக்கு பயன்​பெற முடி​யும் என்​பதை சிந்​தித்து முடி​வெ​டுக்க வேண்​டும் என்று கரு​ணா​நிதி கூறி​யி​ருக்​கி​றார்.​

இ​தன் மூலம் ஆங்​கில வழி​யில் கல்வி கற்​றால்​தான் வேலை கிடைக்​கும்;​ போட்டி தேர்​வு​க​ளில் வெற்றி பெற முடி​யும் என்று கட்​ட​ணப் பள்​ளி​கள் நடத்​து​வோர் செய்​யும் பொய் பிர​சா​ரத்​துக்கு முதல்​வர் கரு​ணா​நிதி வலிமை
சேர்த்​தி​ருக்​கி​றார்.​

ஆங்​கில வழி பயிற்று மொழி என்​பது இடை​யில் வந்​தது.​ அதற்கு முன்பு தமிழ் வழிப் பள்​ளி​க​ளி​லேயே
பெரும்​பா​லா​னோர் படித்​த​னர்.​ அவர்​கள் அறி​ஞர்​க​ளாக,​​ மேதை​க​ளாக,​​ அரசு உயர் அதி​கா​ரி​க​ளாக,​​ மருத்​து​வர்​க​ளாக,​​ விஞ்​ஞா​னி​க​ளாக,​​ சிறந்த நிர்​வா​கி​க​ளாக
உயர்ந்​தி​ருக்​கி​றார்​கள்.​

எ​னவே,​​ ஆங்​கில வழிக் கல்​வியை கற்​றால்​தான் பயன்​பெற முடி​யும் என்​ப​தெல்​லாம் வெறும் மாயை.​ இந்த மாய வலை​யில் தமி​ழக அரசு சிக்​கி​வி​டக் கூடாது.​

த​மிழ் செம்​மொழி மாநாடு நடத்த இருக்​கும் இந்த
தரு​ணத்​தில்,​​ தமி​ழக பள்​ளி​கள் அனைத்​தி​லும் தமிழே பயிற்று மொழி என்ற அறி​விப்​பினை முதல்​வர் கரு​ணா​நிதி வெளி​யிட வேண்​டும். இதன் மூலம் நமது கல்வி முறை​யில் இப்​போ​துள்ள ஏற்​றத்​தாழ்வை போக்கி,​​ சமூக நீதியை நிலை​நி​றுத்த முன்​வர வேண்​டும் என்று கூறியுள்ளா ராம​தாஸ்.

கொலை- 'ராமதாஸ், அன்புமணிக்கு தொடர்பில்லை':

இந் நிலையில் திண்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோருக்குத் தொடர்பு இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.

2006ம் ஆண்டு மே 9ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் திண்டிவனம் வீட்டில் ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

இந் நிலையில் சமீபத்தில் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், முதல் தகவல் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன், என்.எம்.கருணாநிதி, பார்த்திபன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்றும், ஆனால், இவர்களை நீக்கிவிட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். முறையாக போலீசார் விசாரணை செய்தபிறகு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். இதுபற்றி பதில் தருமாறு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 24 சாட்சிகளை விசாரித்தோம். இதுதவிர, 85 சாட்சிகளையும் விசாரித்தோம்.

சாட்சிகள் வாக்குமூலம், கைதிகளின் வாக்குமூலம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன் ஆகியோருக்கு இதில் தொடர்பில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது.

ரகு என்பவர் தான் இன்னொருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய சதித்திட்டம் செய்துள்ளார். ஆனால் ரகு தற்போது உயிருடன் இல்லை. ஆகவே, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: