Tuesday, December 15, 2009

தமிழகத்தை பிரிப்பது தவறு இல்லை: ராமதாஸ்

திரு​நெல்வேலி: தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தவறு இல்லை என்று பாம​க​தலைவர் டாக்டர் ராம​தாஸ் கூறினார்.

அவர் கூறுகையில்,

தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி, ஏற்கனவே நான் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறேன். பிரிப்பது தவறு இல்லை. அப்படி பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 32 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.

தமி​ழ​கத்தை வடக்கு, தெற்கு என இரண்​டா​கப் பிரிக்க வேண்​டும் என நான்​தான் முதன்​முத​லில் குரல் கொடுத்​தேன்.​ அதற்கு பிறகு தற்​போது சிலர் அதை முன்​னெ​டுத்​துச் செல்​கின்​ற​னர்.​ இரண்​டா​கப் பிரித்​தால் நல்​லது.​

சிறிய மாநி​ல​மாக இருந்​தால் நிர்​வகிப்பது எளிது, நல்ல வளர்ச்சியும் இருக்கும். சென்னையைப்போல மதுரையிலும் ஒரு தலைமை செயலகம் இருப்பது தவறு இல்லையே. அப்படி இருந்தால் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.

உத்​தரப் பிர​தேச மாநி​லத்தை மூன்​றா​கப் பிரிக்க வேண்​டும் என அந்த மாநில முதல்​வர் மாயா​வதி தெரி​வித்​துள்ளார்.​ இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதேபோல,​​ எதிர்​கா​லத்​தில் தமி​ழக மக்​கள் விரும்​பி​னால் இரண்​டா​கப் பிரிக்​க​லாம்.​

ஆனால் அதை​விட இப்​போது நாங்​கள் முக்​கி​ய​மான பிரச்​சனை​யாகக் கரு​து​வது மீன​வர் வாழ்​வு​ரிமை,​​ முல்லைப் பெரி​யாறு உள்​ளிட்ட நதி​ நீர் உரி​மைப் பிரச்​சனை​கள்,​​ சமச்​சீர் கல்வி,​​ பூரண மது​வி​லக்கு ​ஆகி​ய​வற்​றை​தான்.​

தமி​ழ​கத்​தைல் காம​ரா​ஜர் ஆட்​சிக் காலம்​தான் பொற்​கால ஆட்சி என்​பார்​கள்.​ மக்​கள் எங்​க​ளுக்கு ஆட்சி அமைக்​கும் வாய்ப்பு கொடுத்​தால் அதை​விட சிறந்த ஒரு ஆட்​சியை கொடுக்க முடி​யும்.

இது​வரை தொழில்​துறை,​​ விவ​சா​யம்,​​ கல்வி என ஒவ்​வொன்​றுக்​கும் ஒரு கொள்கை வெளி​யீட்​டு​டன் விரி​வான நிழல் பட்​ஜெட்​டை​யும் நாங்​கள் ஆண்​டு​தோ​றும் தயா​ரித்து, சமர்பித்து வரு​கி​றோம்.​ அதைப் பார்ப்​ப​வர்​கள் தமி​ழக பட்​ஜெட்​டில் ஒன்​றும் இல்லை என கூறு​கின்​ற​னர்.

நான் சொன்ன பிற​கு​தான் தற்​போது உயர் கல்​விக்​கும்,​​ பள்​ளிக் கல்​விக்​கும் தனித் ​தனி அமைச்​சர்​கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போதாது.​ மழ​லை​யர் கல்வி,​​ ஆரம்​பக் கல்​விக்கு என தனி​யாக ஓர் அமைச்​சர் நிய​மிக்​கப்​பட வேண்​டும் என்​றார் ராம​தாஸ்.

கூட்​டணி குறித்து கேட்டதற்கு, அது சட்​டப் பேர​வைத் தேர்​தல் வரும்​போது முடிவு செய்​யப்​ப​டும். இடைத் தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் '49 ஓ' படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம்.

வந்தவாசி இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பாமக செயல்படவில்லை. பாமகவை பொறுத்தவரையில் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் கூட்டணி அமைப்பது இல்லை. தொகுதி உடன்பாடுதான் வைத்திருந்தோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வருகிற 2011ம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: