Tuesday, December 1, 2009

பாமக தோல்விக்கு அதிமுகவே காரணம்-ராமதாஸ்

வேலூர்: கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.

வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாநாடு கோட்டை வெளி மைதானத்தில் நடைபெற்றது.

அதில் பேசிய பாமக நிறுவர் ராமதாஸ்,
தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 2 கோடி பேர் உள்ளோம். ஆனால் 65 லட்சம் பேர் தான் உள்ளதாக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்கிறார்.

1980ம் ஆண்டு வன்னிய சங்கம் தொடங்கப்பட்டபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரினோம். அதைத்தான் இப்போதும் கோருகிறோம்.

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ரூ.50 கோடி செலவிட தேவையில்லை. வி.ஏ.ஓக்கள் மூலமே சுலபமாக கணக்கெடுப்பு நடத்திவிடலாம்.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதால் கூட்டணி வைத்தோம். அந்த கட்சியில் இருக்கும் கோஷ்டி சண்டை போல எந்த கட்சியிலும் இல்லை. அந்த கட்சியினர் தேர்தலில் விலை போயினர். அதன் காரணமாக நாம் தேர்தலில் தோற்றுப் போனோம்.

நான் காரில் சென்று எல்லா தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தேன். ஜெயலலிதாவோ ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்தார்.

தேர்தலில் 9 இடங்களில் அதிமுக வென்றது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு நாம்தான் காரணம். வெற்றி பெற்றவர்களில் ஒருவர் கூட, நமக்கு நன்றி தெரிவிக்கவில்லை. காரணம் நமக்கு நன்றி தெரிவித்தால் ஜெயலலிதா கட்சியிலிருந்து தூக்கி விடுவாரோ என்ற பயம். இப்படித்தான் உள்ளது அந்தக் கட்சி.

வன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நாம் ஆட்சிக்கு வந்தால், எல்லா தரப்பு மக்களுக்கும் உரிய மரியாதை, பங்கு தருவோம் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: