Sunday, December 6, 2009

பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்

தர்மபுரி: காலியாக உள்ள பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தர்மபுரி வந்திருந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து விட்டால் தனித்து போட்டியிடுவோம். அதே நேரத்தில் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் அதை வரவேற்போம் என்றார்.

இலங்கைக்கு மீண்டும் எம்.பிக்கள் குழுவை அனுப்பப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது குறித்த கேட்ட கேள்விக்கு, இலங்கைக்கு இந்தியாவில் இருந்து மீண்டும், மீண்டும் குழுக்களை அனுப்புவது வெறும் கண்துடைப்பு. தனிநாடு என்பதுதான் ஒரே தீர்வு என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: