Sunday, December 20, 2009

பள்ளிகளில் கட்டாய தமிழிசைப் பாடம்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் 7ம் ஆண்டு பண்ணிசை பெருவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க நிறுவனரும், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான ராமதாஸ் தலைமை தாங்கினார்.

இதில், மன்றத்தின் தலைவர் ஜே.வி.கண்ணன், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமதாஸ் பேசுகையில், 'இசையை குழந்தை பருவத்தில் இருந்தே பாடமாக கற்றுத்தர வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.

1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் பண்ணிசையை பாடமாக சொல்லி கொடுக்க வேண்டும். வாரத்தில் 3 நாட்களாவது கட்டாயமாக இசை பாட வகுப்பு நடத்தப்பட வேண்டும்.

தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த ஆண்டும் வேண்டுகோள் வைக்கிறேன். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் இசை பேரறிஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். 58 வயதை கடந்த இசை கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஆங்கில பள்ளிகளில் எல்லாம் மேலைநாட்டு இசையை பாடமாக கற்பிக்கிறார்கள். ஆனால், நாம் தமிழ் இசையை வளர்க்க ஒன்றுமே செய்யவில்லை.

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். எங்கே இருக்கிறது தமிழ்? தமிழ் மொழி வேகமாக அழிந்து வருகிறது. அதனை காப்பாற்ற தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: