Friday, December 11, 2009

வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை - ராமதாஸ்

செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தாம் 1972 ஆம் ஆண்டு முதலே பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், 107 ஜாதிகளை பட்டியலிட்டு ஒட்டு மொத்தமாக 20 சதவீதம் மட்டுமே.

இது பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு போதுமானதாக இல்லை. தமிழகம் முழுவதும் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை உடனடியாக நடத்தி அதனடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.

சட்டநாதன் கமிஷன் கூறிய இடஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது போன்று மற்ற ஜாதியினருக்கும் அவர்களின் சதவீதத்திற்கு ஏற்றாற் போல் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இக்கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க முடியும். ஏனென்றால் அவரை 5 முறை முதல்வராக்கிய பெருமையில் பெரும் பங்கு வன்னியர்களுக்கு உண்டு என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: