ஜெயங்கொண்டம்: வன்னியர்கள் வன்னியர்களுக்கு மட்டுமே, குறிப்பாக பாமகவுக்கு மட்டுமே ஒட்டு போட்டால் தமிழகத்தில் உள்ள 120 சட்டசபை தொகுதிகளில் பாமக வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரிக்கையை தூசி தட்டி எடுத்துள்ளார்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டும், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக்கோரி வலியுறுத்தியும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட வன்னியர் சங்க மாநாடு ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில்,
ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு 20 ஆண்டுகளுக்கு முன் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.
கையகப்படுத்திய நிலத்திற்கு ஒரு ஏககருக்கு ரூ.25 ஆயிரம் மட்டும் அரசு விலை வழங்கியுள்ளது. இந்த செயல் கண்டனத்திற்கு உரியது.
இங்கு நிலக்கரி எடுக்க வேண்டும் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.20 லட்சம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிலக்கரிஎடுக்க அனுமதிக்க மாட்டோம். அதற்காக எந்த போராட்டத்தையும் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
தமிழகத்தில் உள்ள 6 கோடி பேரில் 2 கோடி பேர் வன்னியர்கள் உள்ளனர். வன்னியர்கள் வன்னியர்களுக்கே ஒட்டு போட்டால் தமிழகத்தில் 120 சட்டசபை தொகுதிகளில் வெற்றிக் கனியை பறித்து ஆட்சியை பிடிக்கலாம். இதற்கு அனைத்து வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும்.
1987 -ல் போராட்டம் நடத்தி மற்ற சாதிகளுடன் இணைந்து 20 சதவீத இடஒதுக்கீடு பெற்றோம்.ஆனால் அதில் 7 சதவீதம் கூட நமக்கு பலன் கிடைக்கவில்லை.
வன்னியர்களுக்கு என தனியாக 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அறவழியில் போராட்டம் நடத்தி சிறை செல்ல 20 வயது முதல் 30 வயது வரையுள்ள ஒரு லட்சம் இளைஞர்கள் தயாராக வேண்டும்.
சிறையில் இருந்து வெளியில் விட்டாலும் மீண்டும் அதே போராட்டத்தை நடத்தி சிறைக்கு செல்ல வேண்டும். நான்கூட 6 மாதம் சிறைக்குச் செல்ல தயாராக உள்ளேன் என்றார்.
Wednesday, December 30, 2009
வன்னியர்கள் ஓட்டு வன்னியர்களுக்கே-ராமதாஸ்
Tuesday, December 29, 2009
புத்தாண்டில் பாமக பொதுக்குழுக் கூடுகிறது
சென்னை: பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 1ம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாமக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2010-ம் ஆண்டுக்கான செயல்திட்ட விளக்க முதல் பொதுக்குழு கூட்டம் ஜனவரி மாதம் 1-ந் தேதி நடைபெறுகிறது.
அன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அரசியல் பயிலரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தலைமை வகிக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, December 28, 2009
பென்னாகரம் தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும்- பாமக
சென்னை: பென்னாகரம் தொகுதியில் தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடைபெற வேண்டும் என்றால், தொகுதி தேர்தல் அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட பிறகு அத்தொகுதியில் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் ஆளும் கட்சியினரால் நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு பா.ம.கவின் இளைஞர் சங்கத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமனி ராமதாஸ் பென்னாகரம் தாசில்தார் பொன்ராஜ் மற்றும் பென்னாகரம் காவல்துறை ஆய்வாளர் ராஜ்குமார், டி.எஸ்.பி. பஞ்சவர்னம் ஆகியோர்களால் வாகன சோதனை என்ற பெயரில் தடுத்து நிறுத்தப்பட்டு அவமதித்துள்ளனர்.
மேலும் தொகுதிக்கு செல்ல முடியாத வகையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனத்தை மறித்து தடை செய்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரனிடம் தெரிவித்ததற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதுடன் புகார் செய்த பா.ம.கவினர் மீதே பொய் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
எனவே இந்த பாரபட்ச நடவடிக்கையை கருத்தில் கொண்டு இதில் சம்மந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும்.
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் அதிகாரி கோட்ட வருவாய் ஆய்வாளர் (டி.ஆர்.ஓ.) மகேஸ்வரி, அமைச்சர் காந்திசெல்வனின் நெருங்கிய உறவினர் ஆவார். மேலும் இவர் ஓய்வுபெற்ற போதிலும் இந்த அரசினால் வழங்கப்பட்ட பணி நீட்டிப்பு உத்தரவின் பெயரில் பணியாற்றி வருகிறார்.
இவர் அத்தொகுதியின் தேர்தல் அதிகாரியாக செயல்பட்டால் நேர்மையாகவும், நடுநிலையோடும், பாரபட்சமின்றியும் தேர்தல் நடைபெறாது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எனவே தேர்தல் அதிகாரி மகேஸ்வரியை இடமாற்றம் செய்யப்பட்டு பாரபட்சமில்லாத நேர்மையான அதிகாரி அமர்த்தப்பட வேண்டும்.
தொகுதியில் வாகனச் சோதனை என்ற பெயரில் 18 இடங்களில் சோதனைச்சாவடி அமைத்து வாகனங்களை சோதனை செய்வதாக கூறி எதிர்க்கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மிகுந்த தொல்லை கொடுத்து வருகின்றனர்.
அதேவேளையில் ஆளும் கட்சியின் கட்சிக்கொடி கட்டி செல்லும் வாகனங்களை சோதனை ஏதும் செய்யாமல் சுதந்திரமாக சுற்றி வர காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர்.
எனவே தேர்தல் ஆணையம் ஆளும் கட்சியினரின் இதுபோன்ற அத்து மீறல்களை கண்டும் காணாமல் இருந்து விடாமல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து தேர்தல் நியாயமான முறையில் நடைபெற எல்லாவித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அன்புமணி மீது வழக்கு..
இதற்கிடையே, போலீசாருடன் நடந்த மோதலையொட்டி டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாமகவினரை சந்திப்பதற்காக இரவில் பென்னாகரம் சென்ற அன்புமணியின் காரை போலீஸார் அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து பாமகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.
பென்னாகரம் தாசில்தார் டியூக் பொன்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோருடன் அன்புமணியுடன் வந்த பா.ம.க.வினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதோடு பதற்றமும் ஏற்பட்டது.
அங்கு நடந்ததை படம் எடுத்து கொண்டு இருந்த தேர்தல் கமிஷன் வீடியோகிராபரை ஆதனூரை சேர்ந்த செந்தில் என்பவர் தாக்கினார். அப்போது கேமரா அடித்து நொறுக்கப்பட்டது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பாக பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தேர்தல் பிரசாரம் செய்ய முன் அனுமதி பெறாமல், கூட்டம் நடத்த ஏற்பாடு செய்ததாக டாக்டர் அன்புமணி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. டி.கே.ராஜா, பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் மகாலிங்கம் உள்பட 150 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
மேலும் தேர்தல் கமிஷன் வீடியோ கிராபரை தாக்கி காமிராவை சேதப்படுத்தியதாக பென்னாகரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஆதனூர் செந்தில், பென்னாகரம் பா.ம.க. ஒன்றிய செயலாளர் சத்தியமூர்த்தி, தொப்பூர் பஞ்சாயத்து தலைவர் தயாளன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுக-அதிமுக கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர்-ராமதாஸ்
கிருஷ்ணகிரி: கடந்த மக்களவைத் தேர்தலில் திமுகவும்,அதிமுகவும் கூட்டணி அமைத்து பாமகவை தோற்கடித்து விட்டனர் என்று அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட வன்னியர் சங்க மாநாடு அந்த நகரில் நடைபெற்றது. பாமக தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி குரு ஆகியோர் பங்கேற்ற இக் கூட்டத்தில் பேசிய ராமதாஸ்,
தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 2 கோடி பேர் வன்னியர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் மக்கள் தொகை அதிகமாக உள்ள ஜாதிகளில் வன்னியர்கள் தான் அதிகம்.
ஆனால் இட ஒதுக்கீடு, மற்றும் வேலைவாய்ப்பில் மிக குறைவான எண்ணிக்கையில் தான் வன்னியர்கள் இருந்து வருகின்றனர். எனவே தான் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதனால் இந்நிலை மாற வேண்டும் என்பதற்காக தைலாபுரத்தில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் கல்வி கோவிலை உருவாக்கி வருகிறோம். இதில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்ள இலவசமாக கல்வி வழங்கி வருகிறோம்.
ஆனால் தமழகத்தில் வன்னியர்கள் ஏமாற்றபடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதனால் தான் நான் 1980ல் இருந்து தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.
குறைந்த மக்கள் தொகை உள்ள ஜாதியினர் தான் அதிகாரத்தில் உள்ளனர். ஆனால் நமது ஜாதியினர் அதிகமாக இருந்தும் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. வரும் காலங்களில் இந்நிலை மாற வேண்டும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டனி அமைத்து கொண்டு திட்டமிட்டு தேர்தலில் எங்களுக்கு ஓட்டு போடாமல் செய்து விட்டனர். இதனால் தான் நாங்கள் 7 இடங்களிலும் வெற்றி பெரும் வாய்ப்பினை இழந்து விட்டோம்.
ஆனாலும் நாங்கள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம். தொடர்ந்தும் பாடுபடுவோம் என்றார் ராமதாஸ்.

Wednesday, December 23, 2009
பொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் கூடாது-பாமக
சென்னை: பொங்கல் பண்டிகையின்போது பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது மோதல்களுக்கு வழி வகுக்கும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
இந்த தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்த 21 நாட்களிலேயே இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி மின்னல் வேகத்தில் ஒரு இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.
பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, உள்ளூர் மற்றும் மாநில அளவிலான பண்டிகைகள், தேசிய அளவிலான விழாக்கள் குறுக்கிடுகின்றனவா என்பது பரிசீலிக்கப்பட்டு, அதற்கேற்றபடி தேர்தல் அட்டவணை முடிவு செய்யப்படுவது வழக்கம்.
தேர்தல் பிரச்சாரம், வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்பது போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் பண்டிகைகளும், விழாக்களும் தடையாக இருக்கக் கூடாது என்பது தான் இதற்கு முக்கிய காரணம்.
ஆனால், போகிப் பண்டிகை, தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள், திருவள்ளுவர் திருநாள், காணும் பொங்கல் என தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் உச்சகட்ட பிரச்சாரம் நடைபெற வேண்டிய சூழ்நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் ஜனவரி 6ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு சட்டசபை கூட்டமும் நடைபெற இருக்கிறது. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் அட்டவணையை முடிவு செய்து வெளியிட்டிருக்கிறது.
பொதுவாக இடைத்தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்கு முன்பு மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்பது வழக்கம். பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்னர் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்டதா?
ஆம் என்றால் தேர்தல் பணியாற்றுகின்ற நாட்களில் தமிழர்கள் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகைகள் குறுக்கிடுகின்றன என்பதை மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதா? கருத்து கேட்கவில்லை என்றால், இப்போதும் காலம் கடந்து விடவில்லை.
கருத்து வேறுபாடுகளையும் தனிப்பட்ட கோபதாபங்களையும் மறந்து தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் மோதல்களை வளர்க்கும் தேர்தலை நடத்துவது உசிதமல்ல என்பதையும், பென்னாகரம் இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்தலாம் என்பதையும் மாநில அரசும், முதலமைச்சரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.
பாமக இதனை தேர்தல் ஆணையத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதர அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
பலத்தை காட்ட பாமக ரெடி?:
இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க அத்தொகுதியில் பாமக போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.
திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதேபோல, அதற்கு முன்பு நடந்த ஐந்து தொகுதி இடைத் தேர்தலிலும் அது யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, போட்டியிடவும் இல்லை.
இந்த நிலையில் தற்போது பென்னாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் பெல்ட்டில் வரும் தொகுதி பென்னாகரம். இது முன்பு பாமகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது.
ஆனால் தற்போது இத்தொகுதி திமுக வசம் உள்ளது. அதை விட முக்கியமாக அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து மறைந்த பெரியண்ணன் பாமகவிலிருந்துதான் திமுகவுக்குத் தாவி வந்தார்.
பாமகவைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் குறித்து அது ஒரு கொள்கையுடன் இருப்பதாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக மாற்றப்பட்டு அங்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தலாம் தனது நிலைப்பாடு நிலைப்பாடு என அவர் கூறிவருகிறார்.
வேறு காரணங்களுக்காக காலி இடம் ஏற்பட்டால் ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சியின் சார்பில் வேறொருவரை உறுப்பினராக நியமிக்கும் முறையைக் கொண்டு வரலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்து வருகிறார்.
ஆனால் வந்தவாசி தொகுதி பாமகவுக்கு சற்றே சாதகமான தொகுதி. இதுவும் வன்னியர் பெல்ட்டில் உள்ள தொகுதிதான். ஆனால் கொள்கை, கோட்பாடு என்று கூறி வந்தவாசியில் பாமக போட்டியிடாததால் அக்கட்சியினர் பெரும் வருத்தமடைந்தனர்.
இதை உணர்ந்த டாக்டர் ராமதாஸ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின்போது, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். இதன் மூலம் பாமக பென்னாகரத்தில் போட்டியிடும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார்.
மேலும், ஒரு வேளை பாமக போட்டியிட்டாலும் கூட அது தனித்துதான் போட்டியிடும் என்றும் கூறியிருந்தார் ராமதாஸ்.
தற்போது பென்னாகரத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் உற்சாகமடைந்தனர். தொகுதி முழுவதும் இப்போதே தேர்தல் பணிகளை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.
இந்தத் தொகுதியிலிருந்துதான் பாமக தலைவர் ஜி.கே.மணி இரண்டு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இதில் இப்போது வெற்றி பெறுவது கெளரவம் சம்பந்தப்பட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.
எனவே இத்தேர்தலையும் புறக்கணிக்காமல் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் பாமகவினர் உள்ளனர். அதே கருத்தில்தான் பாமக தலைமையும் இருப்பதாக தெரிகிறது.
அதேசமயம், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றால், அதை வைத்து அடுத்த கூட்டணியில் சேர வாய்ப்பாக அமையும் என்பதும் பாமகவினரின் எண்ணம். தற்போது யாரும் சீந்தாத, சேர்க்க விரும்பாத கட்சியாக மாறிப் போயுள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பென்னாகரம், பாமகவுக்கு புத்துயிர் அளிக்கும் தேர்தல் என்றால் அது மிகையில்லை.
இதை மனதில் கொண்டு பா.ம.க. ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கடந்த இரு வாரங்களாக பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். பா.ம.க. ஆதரவு உள்ள பகுதிகளில் அவர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
இதன் அடிப்படையில் வலுவான வேட்பாளரை நிறுத்தி முழு மூச்சாக பிரசாரம் செய்து, பாமகவின் வெற்றியை உறுதி செய்ய அக்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

Sunday, December 20, 2009
பள்ளிகளில் கட்டாய தமிழிசைப் பாடம்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை: தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொங்கு தமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் 7ம் ஆண்டு பண்ணிசை பெருவிழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு பா.ம.க நிறுவனரும், பொங்குதமிழ் பண்ணிசை மணிமன்றத்தின் நிறுவனருமான ராமதாஸ் தலைமை தாங்கினார்.
இதில், மன்றத்தின் தலைவர் ஜே.வி.கண்ணன், முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராமதாஸ் பேசுகையில், 'இசையை குழந்தை பருவத்தில் இருந்தே பாடமாக கற்றுத்தர வேண்டும் என்று நான் சொல்லி வருகிறேன்.
1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் பண்ணிசையை பாடமாக சொல்லி கொடுக்க வேண்டும். வாரத்தில் 3 நாட்களாவது கட்டாயமாக இசை பாட வகுப்பு நடத்தப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் அவர்களுக்கு இந்த ஆண்டும் வேண்டுகோள் வைக்கிறேன். பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகள் இசை பேரறிஞர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். 58 வயதை கடந்த இசை கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஆங்கில பள்ளிகளில் எல்லாம் மேலைநாட்டு இசையை பாடமாக கற்பிக்கிறார்கள். ஆனால், நாம் தமிழ் இசையை வளர்க்க ஒன்றுமே செய்யவில்லை.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்கிறார்கள். எங்கே இருக்கிறது தமிழ்? தமிழ் மொழி வேகமாக அழிந்து வருகிறது. அதனை காப்பாற்ற தமிழ் இசையை பாடமாக கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன்' என்றார்.

Wednesday, December 16, 2009
எம்எல்ஏக்கள் சாவுக்கு ஏங்கும் மக்கள்-ராமதாஸ்
ராமநாதபுரம்: ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, கர்நாடகத்தில் உள்ள பெங்களூர் போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ராமேஸ்வரத்தில் மீனவர்களுக்கு ஆதரவாக பாமக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்தியாவில் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தல் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது. பணத்துக்கு ஓட்டு என்பதை மக்களிடம் விதைத்து விட்டனர்.
இதனால் தங்கள் தொகுதி எம்எல்ஏ எப்போது இறப்பார் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தொகுதி மக்களிடமும் வந்துவிட்டது. எம்எல்ஏக்களுக்கு மாரடைப்பு வராதா என தொகுதி மக்கள் எதிர்பார்க்கும் நிலை வந்துவிட்டது. இது வேதனை அளிக்கிறது.
முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்து தலைவர்களும் கூடி, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை நிறுத்த முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் கமிஷன் தனது குறைந்தபட்ச அதிகாரத்தை கூட பயன்படுத்துவதில்லை. தேர்தல் காலங்களில் பார்வையாளர்களாக நியமிக்கப்படும் அதிகாரிகள், அந்தந்தப் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பகுதிகளை பார்க்கத்தான் வருகிறார்கள்.
முறைகேடுகளைக் கண்டறிந்து எங்கும் தேர்தலை நிறுத்தியதாகத் தெரியவில்லை. அவர்களது குறைந்தபட்ச அதிகாரத்தைக் கூட பயன்படுத்த மறுக்கிறார்கள்.
கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரியில் ரூ.70 லட்சம் வைத்திருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்தும் எந்தப் பயனுமில்லை. தேர்தல் ஆணையம் என்பது வேடிக்கை பார்க்கும் அமைப்பாகவே செயல்பட்டு வருகிறது.
முறைகேடு நடப்பதால் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளின் இடைத்தேர்தலை ரத்து செய்யவேண்டும். வந்தவாசியில் பாமகவினர் திமுகவுக்கு ஆதரவாக வேலை பார்ப்பதாக வரும் செய்தி பொய்யானது.
கச்சத் தீவை மீட்பது ஒன்றே தமிழக மீனவர்களைப் பாதுகாக்க சிறந்த தீர்வாகும். தமிழக அரசு கடந்த 1974ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது முதல்வராக கருணாநிதி இருந்தார்.
தீர்மானம் கொண்டு வந்த அடுத்த இரு மாதங்களிலேயே கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்தது மத்திய அரசு. நமக்கு சொந்தமான நிலத்தை அடுத்த நாட்டுக்கு கொடுக்கும் போது கூட கருணாநிதி எந்தக் குரலும் கொடுக்கவில்லை. தமிழக மக்களை ஒன்றுதிரட்டி எந்தப் போராட்டமும் நடத்தவில்லை.
மேற்கு வங்கத்தின் சிறிய நிலப்பரப்பு அப்போதைய கிழக்கு பாகிஸ்தானுக்கு (வங்கதேசம்) தரப்பட்டபோது
அப்போது முதல்வராக இருந்த பி.சி.ராய், குடியரசு தினத்தன்று அவரது வீட்டில் கருப்புக் கொடி ஏற்றினார். சுதந்திர தினத்தை துக்க நாளாக அறிவித்தார். ஆனால் முதல்வராக இருந்த கருணாநிதி எதையும் செய்யவில்லை.
இந்தியாவின் இலங்கை வெளியுறவு கொள்கையால் சீனா மூலம் தென் தமிழகம் வழியாக ஆபத்து ஏற்படவுள்ளது. இலங்கையில் தனி ஈழம் அமைத்தால் மட்டுமே இதிலிருந்து இந்தியா தப்ப முடியும்.
கோவையில் நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டினால், தமிழ் வளர்ச்சிக்காக எதையும் சாதித்துவிடப் போவதில்லை.
கிராமங்களில் கூட சிறுவர்கள் தமிழில் ஆங்கிலத்தை கலந்து பேசுகிறார்கள். இன்னும் 10 வருடங்களில் தமிழ் மொழி கலப்பு மொழியாகிவிடும். காணாமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பறித்து அவர்கள் தொழிலே செய்ய முடியாத நிலையை இலங்கை அரசு செய்துவருகிறது. இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய-மாநில அரசுகள் பதில் சொல்ல வேண்டும்.
கேரள மீனவர் ஒருவர் தாக்கப்பட்டு இருந்தால் இந்திய அரசு இலங்கையுடன் யுத்தமே நடத்தி இருக்கும்.
அமெரிக்காவைபோல இந்தியாவில் சிறிய மாநிலங்களை உருவாக்கினால் நாடு வேகமாக வளர்ச்சி அடையும். தெலுங்கானா, விதர்பா மாநிலங்களை உருவாக்குவது மிகவும் அவசியமானதாகும். உத்தரப் பிரதேசத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் மாயாவதி கோரிக்கை விடுத்துள்ளார். நிர்வாக வசதிக்காகவும் வளர்ச்சிக்காகவும் தமிழகத்தை 2 ஆக பிரித்தால் நல்லது.
ஆந்திராவில் உள்ள சித்தூர், தேவிகுளம் பெருமேடு, பெங்களூரு போன்றவற்றை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.

Tuesday, December 15, 2009
தமிழகத்தை பிரிப்பது தவறு இல்லை: ராமதாஸ்
திருநெல்வேலி: தமிழ்நாட்டை இரண்டாக பிரிப்பது தவறு இல்லை என்று பாமகதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
அவர் கூறுகையில்,
தமிழகத்தை இரண்டாக பிரிப்பது பற்றி, ஏற்கனவே நான் தெளிவான கருத்தை சொல்லியிருக்கிறேன். பிரிப்பது தவறு இல்லை. அப்படி பிரித்தால் நிர்வாகத்திறன் மேம்படும். தொடக்கத்தில் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் இருந்தன. தற்போது 32 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்க வேண்டும் என நான்தான் முதன்முதலில் குரல் கொடுத்தேன். அதற்கு பிறகு தற்போது சிலர் அதை முன்னெடுத்துச் செல்கின்றனர். இரண்டாகப் பிரித்தால் நல்லது.
சிறிய மாநிலமாக இருந்தால் நிர்வகிப்பது எளிது, நல்ல வளர்ச்சியும் இருக்கும். சென்னையைப்போல மதுரையிலும் ஒரு தலைமை செயலகம் இருப்பது தவறு இல்லையே. அப்படி இருந்தால் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக இருக்கும்.
உத்தரப் பிரதேச மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அந்த மாநில முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார். இவற்றையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதேபோல, எதிர்காலத்தில் தமிழக மக்கள் விரும்பினால் இரண்டாகப் பிரிக்கலாம்.
ஆனால் அதைவிட இப்போது நாங்கள் முக்கியமான பிரச்சனையாகக் கருதுவது மீனவர் வாழ்வுரிமை, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நதி நீர் உரிமைப் பிரச்சனைகள், சமச்சீர் கல்வி, பூரண மதுவிலக்கு ஆகியவற்றைதான்.
தமிழகத்தைல் காமராஜர் ஆட்சிக் காலம்தான் பொற்கால ஆட்சி என்பார்கள். மக்கள் எங்களுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கொடுத்தால் அதைவிட சிறந்த ஒரு ஆட்சியை கொடுக்க முடியும்.
இதுவரை தொழில்துறை, விவசாயம், கல்வி என ஒவ்வொன்றுக்கும் ஒரு கொள்கை வெளியீட்டுடன் விரிவான நிழல் பட்ஜெட்டையும் நாங்கள் ஆண்டுதோறும் தயாரித்து, சமர்பித்து வருகிறோம். அதைப் பார்ப்பவர்கள் தமிழக பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை என கூறுகின்றனர்.
நான் சொன்ன பிறகுதான் தற்போது உயர் கல்விக்கும், பள்ளிக் கல்விக்கும் தனித் தனி அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது போதாது. மழலையர் கல்வி, ஆரம்பக் கல்விக்கு என தனியாக ஓர் அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும் என்றார் ராமதாஸ்.
கூட்டணி குறித்து கேட்டதற்கு, அது சட்டப் பேரவைத் தேர்தல் வரும்போது முடிவு செய்யப்படும். இடைத் தேர்தலை பொறுத்தவரை எங்கள் கட்சி எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவில்லை. தேர்தலில் '49 ஓ' படிவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறோம்.
வந்தவாசி இடைத் தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவாக பாமக செயல்படவில்லை. பாமகவை பொறுத்தவரையில் குறைந்தபட்ச செயல் திட்ட அடிப்படையில் கூட்டணி அமைப்பது இல்லை. தொகுதி உடன்பாடுதான் வைத்திருந்தோம். தற்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. வருகிற 2011ம் ஆண்டு வரும் பொதுத்தேர்தலில் கூட்டணி குறித்து அப்போது முடிவு செய்வோம் என்றார்.

Friday, December 11, 2009
வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தேவை - ராமதாஸ்
செங்கல்பட்டு: கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கக் கோரி, வன்னியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டில் மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு ராமதாஸ் பேசுகையில், இம்மாநாட்டில் பங்கேற்று பேசும் போது, வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு தாம் 1972 ஆம் ஆண்டு முதலே பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், 107 ஜாதிகளை பட்டியலிட்டு ஒட்டு மொத்தமாக 20 சதவீதம் மட்டுமே.
இது பெரும்பான்மையாக உள்ள வன்னியர்களுக்கு போதுமானதாக இல்லை. தமிழகம் முழுவதும் ஜாதிவாரியான கணக்கெடுப்பினை உடனடியாக நடத்தி அதனடிப்படையில் ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
சட்டநாதன் கமிஷன் கூறிய இடஒதுக்கீட்டினை உடனடியாக அமல்படுத்த வேண்டும். வன்னியர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது போன்று மற்ற ஜாதியினருக்கும் அவர்களின் சதவீதத்திற்கு ஏற்றாற் போல் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இக்கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்க முடியும். ஏனென்றால் அவரை 5 முறை முதல்வராக்கிய பெருமையில் பெரும் பங்கு வன்னியர்களுக்கு உண்டு என்றார் ராமதாஸ்.

ஆங்கில வழி கல்விக்கு கருணாநிதி ஆதரவு-பாமக
சென்னை: சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்துவதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகள் ஆங்கில வழி கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அனைத்து குழந்தைகளும் ஒரே விதமான கல்வி முறையில் பயில வேண்டும் என்ற நோக்கிலான சமச்சீர் கல்வி முறையை அமல்படுத்த, தமிழக அரசு சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
ஆனால் கல்வியை தனியார் மயம், வணிக மயமாக்கும் ஆங்கில வழியிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
பெரும்பாலான மாணவர்கள் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ், தமிழ் வழிக் கல்வி பயின்று வருகிறார்கள். இதில்
நான்கில் ஒரு பகுதிக்கும் குறைவானவர்களே ஆங்கில வழிக் கல்வி நிலையங்களில் படிக்கின்றனர்.
வசதி படைத்தவர்கள், சமுதாயத்தில் மேல்தட்டில்
இருப்பவர்களின் குழந்தைகள்தான் ஆங்கில வழி, கட்டணப் பள்ளிகளில் படிக்கின்றனர்.
அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்துகிறோம் என்று அரசு அறிவித்தது. ஆனால் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு பயன்பட்டு வரும் கட்டணப் பள்ளிகளும், ஆங்கில பயிற்று மொழியும் தொடர்ந்து நீடிக்கும் என்று அறிவித்திருப்பது சமூக நீதிக்கு எதிரானது. அரசியல் சட்டத்திற்கும் எதிரானது.
6 முதல் 14 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் கட்டாய, இலவச கல்வி அளிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், ஆங்கில வழியிலான கட்டணப் பள்ளிகள் நீடித்து வரும் நிலையில், அனைவருக்கும் இலவசக் கல்வி என்பது எவ்வாறு சாத்தியமாகும்?.
ஆங்கில வழிக் கல்விக்கு ஆதரவான கருத்துகளை முதல்வர் கருணாநிதியும் தெரிவித்துள்ளார். இது வேதனை அளிப்பதாக உள்ளது.
அண்ணாவின் இருமொழிக் கொள்கையே எங்களது கொள்கை என்று அறிவித்துள்ள முதல்வர் கருணாநிதி, இருமொழிக் கொள்கையில் இடம்பெறாத ஒரு கருத்து திணிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
தாய் மொழியில் மட்டும் சமச்சீர் கல்வியை கொண்டு
வருவதன் மூலம் எந்த அளவுக்கு பயன்பெற முடியும் என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.
இதன் மூலம் ஆங்கில வழியில் கல்வி கற்றால்தான் வேலை கிடைக்கும்; போட்டி தேர்வுகளில் வெற்றி பெற முடியும் என்று கட்டணப் பள்ளிகள் நடத்துவோர் செய்யும் பொய் பிரசாரத்துக்கு முதல்வர் கருணாநிதி வலிமை
சேர்த்திருக்கிறார்.
ஆங்கில வழி பயிற்று மொழி என்பது இடையில் வந்தது. அதற்கு முன்பு தமிழ் வழிப் பள்ளிகளிலேயே
பெரும்பாலானோர் படித்தனர். அவர்கள் அறிஞர்களாக, மேதைகளாக, அரசு உயர் அதிகாரிகளாக, மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, சிறந்த நிர்வாகிகளாக
உயர்ந்திருக்கிறார்கள்.
எனவே, ஆங்கில வழிக் கல்வியை கற்றால்தான் பயன்பெற முடியும் என்பதெல்லாம் வெறும் மாயை. இந்த மாய வலையில் தமிழக அரசு சிக்கிவிடக் கூடாது.
தமிழ் செம்மொழி மாநாடு நடத்த இருக்கும் இந்த
தருணத்தில், தமிழக பள்ளிகள் அனைத்திலும் தமிழே பயிற்று மொழி என்ற அறிவிப்பினை முதல்வர் கருணாநிதி வெளியிட வேண்டும். இதன் மூலம் நமது கல்வி முறையில் இப்போதுள்ள ஏற்றத்தாழ்வை போக்கி, சமூக நீதியை நிலைநிறுத்த முன்வர வேண்டும் என்று கூறியுள்ளா ராமதாஸ்.
கொலை- 'ராமதாஸ், அன்புமணிக்கு தொடர்பில்லை':
இந் நிலையில் திண்டிவனத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டு முன்பு அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோருக்குத் தொடர்பு இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.
2006ம் ஆண்டு மே 9ம் தேதி தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றபோது முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தின் திண்டிவனம் வீட்டில் ஒரு ஆயுதம் தாங்கிய கும்பல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில் அதிமுக தொண்டர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.
இந் நிலையில் சமீபத்தில் சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், முதல் தகவல் அறிக்கையில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன், என்.எம்.கருணாநிதி, பார்த்திபன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன என்றும், ஆனால், இவர்களை நீக்கிவிட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். முறையாக போலீசார் விசாரணை செய்தபிறகு தான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, இந்த கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தார். இதுபற்றி பதில் தருமாறு போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார்.
இதையடுத்து திண்டிவனம் டி.எஸ்.பி. தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், கொலை சம்பவம் நடந்த இடத்தில் இருந்த 24 சாட்சிகளை விசாரித்தோம். இதுதவிர, 85 சாட்சிகளையும் விசாரித்தோம்.
சாட்சிகள் வாக்குமூலம், கைதிகளின் வாக்குமூலம் இவற்றையெல்லாம் பார்க்கும்போது டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், பரசுராமன், சீனிவாசன் ஆகியோருக்கு இதில் தொடர்பில்லை என்பது தெளிவாக தெரிய வந்தது.
ரகு என்பவர் தான் இன்னொருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ய சதித்திட்டம் செய்துள்ளார். ஆனால் ரகு தற்போது உயிருடன் இல்லை. ஆகவே, சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது

Sunday, December 6, 2009
பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ராமதாஸ்
தர்மபுரி: காலியாக உள்ள பென்னாகரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், அதில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியர் சங்க மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தர்மபுரி வந்திருந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில், தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவெடுத்து விட்டால் தனித்து போட்டியிடுவோம். அதே நேரத்தில் பிற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்தால் அதை வரவேற்போம் என்றார்.
இலங்கைக்கு மீண்டும் எம்.பிக்கள் குழுவை அனுப்பப் போவதாக மத்திய அரசு கூறியிருப்பது குறித்த கேட்ட கேள்விக்கு, இலங்கைக்கு இந்தியாவில் இருந்து மீண்டும், மீண்டும் குழுக்களை அனுப்புவது வெறும் கண்துடைப்பு. தனிநாடு என்பதுதான் ஒரே தீர்வு என்றார் ராமதாஸ்.

Tuesday, December 1, 2009
பாமக தோல்விக்கு அதிமுகவே காரணம்-ராமதாஸ்
வேலூர்: கடந்த மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு ஏற்பட்ட தோல்விக்கு அதிமுக தான் காரணம் என்று டாக்டர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
வன்னியர் சங்கத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மாநாடு கோட்டை வெளி மைதானத்தில் நடைபெற்றது.
அதில் பேசிய பாமக நிறுவர் ராமதாஸ்,
தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 2 கோடி பேர் உள்ளோம். ஆனால் 65 லட்சம் பேர் தான் உள்ளதாக முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவிக்கிறார்.
1980ம் ஆண்டு வன்னிய சங்கம் தொடங்கப்பட்டபோது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரினோம். அதைத்தான் இப்போதும் கோருகிறோம்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ரூ.50 கோடி செலவிட தேவையில்லை. வி.ஏ.ஓக்கள் மூலமே சுலபமாக கணக்கெடுப்பு நடத்திவிடலாம்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியதால் கூட்டணி வைத்தோம். அந்த கட்சியில் இருக்கும் கோஷ்டி சண்டை போல எந்த கட்சியிலும் இல்லை. அந்த கட்சியினர் தேர்தலில் விலை போயினர். அதன் காரணமாக நாம் தேர்தலில் தோற்றுப் போனோம்.
நான் காரில் சென்று எல்லா தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்தேன். ஜெயலலிதாவோ ஹெலிகாப்டரில் சென்று பிரச்சாரம் செய்தார்.
தேர்தலில் 9 இடங்களில் அதிமுக வென்றது. இதில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு நாம்தான் காரணம். வெற்றி பெற்றவர்களில் ஒருவர் கூட, நமக்கு நன்றி தெரிவிக்கவில்லை. காரணம் நமக்கு நன்றி தெரிவித்தால் ஜெயலலிதா கட்சியிலிருந்து தூக்கி விடுவாரோ என்ற பயம். இப்படித்தான் உள்ளது அந்தக் கட்சி.
வன்னியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். நாம் ஆட்சிக்கு வந்தால், எல்லா தரப்பு மக்களுக்கும் உரிய மரியாதை, பங்கு தருவோம் என்றார்.

Subscribe to:
Posts (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited: