Thursday, May 14, 2015

தமிழகத்தில் பா.ம.க.வை தவிர எந்த கட்சியாலும் மதுவை ஒழிக்க முடியாது: அன்புமணி

 

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட பாட்டாளி மகளிர் சங்கம் சார்பில் மது ஒழிப்பு போராட்டம் இன்று நடந்தது. முன்னாள் மத்திய மந்திரி அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரிகள் ஆர்.வேலு, என்.டி.சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 301 டாஸ்மாக் கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியபோது,  ’’தமிழகத்தில் முதல் முறையாக மதுஒழிப்பு போராட்டத்துக்கு அதிக அளவில் பெண்கள் கூடியுள்ளனர்.  அனைத்து குடும்பத்திலும் மதுவால் பிரச்சினைகள் உள்ளது. இது தமிழகத்தின் பிரச்சினை. 1971ல் தமிழகத்தில் மதுக்கடைகளை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி. 100 கடைகளாக இருந்ததை 6,500 கடைகளாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா.

அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. டாஸ்மாக் வருமானம் மூலம் விலையில்லா பொருட்களை தருகிறார்கள். 2016ல் பா.ம.க. ஆட்சிக்கு வரும்.  அப்போது பூரண மதுவிலக்குக்கு முதல் கையெழுத்து போடப்படும்.   பா.ம.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்.

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அந்த உறுதிமொழியை கொடுக்க முடியாது. தமிழகத்தில் பா.ம.க.வை தவிர எந்த கட்சியாலும் மதுவை ஒழிக்க முடியாது. கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம், மின்சாரம், விவசாய உற்பத்தி ஆகியவற்றுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படாமல் டாஸ்மாக்குக்கு அதிக இலக்கு நிர்ணயிக்கிறார்கள். எனவே எங்களுக்கு ஆதரவு தாருங்கள். பூரண மதுவிலக்கை அறிமுகப்படுத்துவோம்’’என்று தெரிவித்தார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: