Tuesday, March 30, 2010

பா.ம.க -தனிப்பெரும் கட்சி

1. பா.ம.க-வை எதிர்த்து கருத்து எழுதுபவர்கள் இப்போது எங்கே போனீர்கள்? இருக்கிறீர்களா? அல்லது தொலைந்து போய்விட்டீர்களா? இப்போதாவது நாகரீகமாக எழுத பழகிகொள்ளுங்கள். பா.ம.க தனித்து நின்று 41 ஆயிரத்து 285 வாக்குகள் பெற்றுள்ளது. இங்கே முன்பு எழுதியவர்கள் பா.ம.க- ஒரு ஜாதி கட்சி, மரம் வெட்டி, பச்சோந்தி என்று எல்லாம் வசைபாடிநீர்களே. இப்போது சொல்லுங்கள் அவர்களுக்கு எப்படி 41 ஆயிரத்து 285 பேர் வாக்களித்தார்கள்? அல்லது 41 ஆயிரத்து 285 பேரும் முட்டாள்களா? ஆட்சி அதிகாரம், பண பலம் கொண்ட தி.மு.க-வை எதிர்த்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது என்பதே பா.ம.க-விற்கு கிடைத்த பெரிய வெற்றியாகும். அ.தி.மு.க. கூட்டணி (அ.தி.மு.க. , ம.தி.மு.க, வலது மற்றும் இடது கம். ), மற்றும் தே.மு.தி.க. ஆகியவை டெபொசிட் இழந்தன. ஆளும் கட்சிலிருந்து கங்கணம்கட்டி பா.ம.க-வை டெபொசிட் இழக்க செய்த முயற்சிகளை எல்லாம் தவிடுபொடியாக்கி, பா.ம.க தமிழக அரசியலில் தவிர்க்கப்படமுடியாத ஒரு சக்தி என்பதை இந்த தேர்தல் மூலம் பா.ம.க நிருபித்துள்ளது

2. பாமக, திமுக, அதிமுக மற்றும் தேமுதிக வேட்பாளர்கள் அனைவரும் வன்னியர்கள் தான். வெற்றி பெற போவது என்னவோ ஒரு வன்னியன் மட்டுமே. பாமக-வை முன்னிறுத்தி வன்னியர்களை சாடும் அனைவருக்கும் இது ஒரு செருப்படி. ஜாதி ஒழிப்பை பற்றி பேசறவங்களும், வன்னியர்களை தரம் தாழ்த்தி பேசும் மடையங்களுக்கும் இந்த தேர்தல் ஒரு நல்ல விளக்க பாடம்

3.ஜெனநாயக முறைப்படி தேர்தல் நடந்திருந்தால் பா.ம.க தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். 2011 சட்டமன்ற பொதுத்தேர்தலில் பா.ம.க பென்னகரத்தில் வெற்றி என்பது இன்று உறுதியுடன் கூறலாம்.

4.அதிமுக, பாமக, தேமுதிக, வலது கம்யூனிஸ்ட், இடது கம்யூனிஸ்ட், மதிமுக, இவைகள் ஒரே அணியில் சேர்ந்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

5.பா ம க பற்றி எந்த பொறமை புடிச்சவங்க கத்தினாலும்...பா ம க பத்தி கேவலமா பேசினாலும்... பா ம க வை அழிக்க யாராலும் முடியாது என்பதை இந்த தேர்தல் காட்டி விட்டது.

6.மொத்தம் 13 கட்சிகளோடு கூட்டணி ,ஓட்டுக்கு 2000 பணம், இதை எல்லாவற்றையும் மீறி தனியாளாக நின்று சுமார் 42000 ஓட்டுகள் வாங்குவது சர்வ சாதாரணம் இல்லை.'பாமக' சிங்கம் சிங்கம் தான்

7.பா ம க வெற்றிய மட்டும் ஏன் ஏற்றுக்க முடியல. அதுக்கு காரணமும் ஒரு ஜாதி வெறி. எப்படி வன்னியன் முன்னேறுறது என்ற குறுகிய மனபோக்குதான். பா ம க ஒரு ஜாதி கட்சின்னு சொல்லுற உங்களுக்கு தி மு க என்ன கட்சின்னு சொல்லுங்க பார்க்கலாம், தி மு க வும் ஒரு வன்னியானதான் நிருத்தினாங்களே ஒழிய ஒரு அடுத்த ஜாதிக்காறன நிக்க வைக்கல. இதுலுல எங்க பா ம க மட்டும் ஜாதி கட்சி. வளர்ச்சிய புடிக்காத முட்டா பசங்கதான் பா ம க ஒரு ஜாதி கட்சி சொல்லி சொல்லி அந்த வளர்சிய தடை செய்ய நினைக்கிரானுங்க.

8. தலைவர் ராமதாசு அவர்களுக்கு, இது நம் கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்றே சொல்லலாம், ஏன் எனில் ஆளும் திமுக மற்றும் எதிர்கட்சியான அதிமுக ஆகிய இரு கட்சியையும் எதிர்த்து இரண்டாம் இடம் பிடிப்பது என்பது எத்தகைய செயல். இது நமக்கு வேண்டுமானால் சாதரணமாக உருக்கலாம் அனால் ஆளும்கட்சிக்கும் அதிர்கட்சிக்கும் வயிற்றில் புளியை கரைக்கும் செயல். நம் மக்களுக்கு விழிப்புணர்வு இன்னும் தேவை. அது மட்டும் இருந்திருந்தால் நாம் வெற்றிபெற்றே இருப்போம், இனியாவது நாம் மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கோடு அரசியல் நடத்துவோம் வரும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம்

9.பா.ம.க. 41,285 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதுவும் எந்தக் கட்சியுடனும் கூட்டு இல்லாமல் தனித்தே இவ்வளவு வாக்குகளைப் பெற்றுள்ளது. 2009-ல் மக்களவைத் தேர்தல் நடந்தபோது பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் செந்தில் 32,753 வாக்குகள் பெற்றார். அப்போது அதிமுகவுடன் கூட்டணி இருந்தது. இப்போது தனித்தே 41 ஆயிரம் வாக்குகளை பா.ம.க. பெற்றுள்ளது என்பது திமுக மற்றும் அதிமுகவில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: