மதுவை ஒழித்து மகளிரை காக்க பூரண மதுவிலக்கு வேண்டியும், பெண்ணுரிமை மற்றும் பாதுகாப்பு கோரியும், ஓசூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. மகளிர் அணி சார்பில், அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
ஓசூர்–பெங்களூர் சாலையில் உள்ள கார்சன் ஓட்டல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியை லட்சுமி பழனிசாமி தலைமை தாங்கினார். புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியபோது, ’’அ.தி. மு. க. ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கடந்த 3 வருடங்களில் தமிழ்நாட்டில் அதிக அளவில் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. 8, 10 மற்றும் 12 வயதிற்குட்பட்ட 873 சிறுமியர் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் 6 பேர் அடங்கிய கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த மாநில போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால், குற்றவாளி களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
ஆனால், நமது மாநிலத்தில் அதே ஆண்டு டிசம்பர் மாதம், தூத்துக்குடி மாவட்டம் தாத்தாங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த புனிதா என்ற 12 வயது சிறுமி, குடிகார கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலையானார். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் மக்களின் வருமானம் உயரவில்லை, ஆனால் அரிசி, பருப்பு..உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் தாறுமாறாக உயர்ந்து விட்டன.
குடியால் குடும்பங்கள் சீர்குலைந்து பல லட்சம் பெண்களின் வாழ்க்கை நரகமாகி விட்டது. குடியால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இளம் விதவைகள் உருவாகி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான, கட்டாய கல்வியை இலவசமாக தருவோம். தரமான கல்வி, தரமான மருத்துவம், விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்குவதை கொள்கையாக கொண்டுள்ள ஒரே கட்சி, உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சிதான்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணிக்கு ஆதரவு தந்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்’’என்று தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணிக்கு ஆதரவு தந்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்’’என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment