பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ‘’அனைத்து சமுதாய பேரியக்கத்தின் முதல் கூட்டம் கடந்த 18.08.2012 அன்று சென்னையில் நடைபெற்றது. அதன்பின்னர் 02.12.2012 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன. இதில் பேசிய சில சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியலில் போட்டியிட வேண்டும் என்று கூறிய போது, நான், அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியல் இயக்கமல்ல... இது ஒரு சமுதாய இயக்கம் என்று விளக்கமளித்து இருக்கிறேன்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ம.க. தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தான் சமூக ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது.
அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் 21.10.2014 அன்று வெளியிடப் பட்டது. இக்கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று நான் தெரிவித்திருந்தேன். அதன்பிறகு, 20.01.2014 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டத்திலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, அதற்கு முந்தைய கூட்டங்களில் தெரிவித்த அதே கருத்தை நான் மீண்டும் கூறினேன்.
ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று செய்தி வெளியிடுவது சரியல்ல.
ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று செய்தி வெளியிடுவது சரியல்ல.
அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், சமூக ஜனநாயக கூட்டணிக்கு வித்தியாசம் தெரியாமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமூக நீதி, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவை தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும், உள்நோக்கம் கற்பித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும் வலிமையுடனும், உத்வேகத்துடனும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் லட்சியப்பயணம் தொடரும்’’ என்று கூறியுள்ளார்
No comments:
Post a Comment