சென்னை: நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம் என்று அரசு கருதுவதையேஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,இந்தியாவிலேயே அதிக அளவில் சாலை விபத்து நிகழும் மாநிலமாகவும், அதிக உயிரிழப்புகள் ஏற்படும் மாநிலமாகவும் தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தின் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் நீக்கமற நிறைந்து கிடக்கும் மதுக்கடைகள் தான் அதிக அளவில் விபத்துக்கள் நடப்பதற்கு காரணம் ஆகும்.நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்றும்படி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகம் வலியுறுத்தி வரும் போதிலும் அதை தமிழக அரசு பொருட்படுத்தவில்லை.நெடுஞ்சாலையோர மதுக்கடைகள் உயிர் குடிக்கும் சாத்தான்களாக விளங்குவதால் அவற்றை அகற்ற ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி அதில் வெற்றியும் பெற்றது.உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 504 மதுக்கடைகளையும், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள 1500க்கும் மேற்பட்ட மதுக்கடைகளையும் கடந்த மார்ச் 31ம் தேதிக்குள் தமிழக அரசு அகற்றியிருக்க வேண்டும்.ஆனால் உயர் நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து நான்கு நாட்களாகியும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் 20% கூட அகற்றப்படவில்லை. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் அதையொட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு மதுக்கடைகளை மட்டும் மூடிய தமிழக அரசு, மீதமுள்ள அனைத்து கடைகளிலும் வழக்கம்போல மது விற்பனையை நடத்திக் கொண்டிருக்கிறது.அகற்றப்பட்ட சில கடைகளையும், விதிகளை மீறி குடியிருப்பு பகுதிகளிலும், பள்ளி கல்லூரிகளுக்கு அருகிலும் அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில பகுதிகளில் இரு நாட்களுக்கு முன்பு மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்பைக் காற்றில் பறக்கவிடும் அரசின் செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்று நீதிபதிகள் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கும் போதிலும், ஒரு மதுக்கடை கூட அகற்றப் படவில்லை. மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மாற்றி அமைக்க வேறு இடம் இல்லை என்பதால் அவற்றை அகற்ற முடியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் கூறியுள்ளனர். இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் நடந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தாலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது குடித்து சீரழிந்தாலும் பரவாயில்லை மதுக்கடைகள் மூலம் கிடைக்கும் வருமானம் தான் முக்கியம் என்று அரசு கருதுவதையே இது காட்டுகிறது. சமச்சீர் கல்வி, புதிய தலைமைச் செயலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் போன்ற வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்புகளை மதிக்காமல் நடந்து கொண்ட தமிழக அரசு இப்போதும் அதே போக்கையே கடைபிடிக்கிறது. அரசியல் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய அரசு இப்படி நடந்து கொள்வது முறையல்ல.சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு எங்கும் திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 6ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மிகப்பெரிய அளவில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளது.எனது தலைமையில் நடைபெறவிருக்கும் இப்போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினர், பெண்கள் மற்றும் மதுவுக்கு எதிரானவர்கள் பெருமளவில் கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/05/tamilnadu-tasmac-shops-issue-ramadoss-slams-172853.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/04/05/tamilnadu-tasmac-shops-issue-ramadoss-slams-172853.html
No comments:
Post a Comment