சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும்; மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு எங்கும் திறக்கக்கூடாது; உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஒரு தொடக்கமாக வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை நடைமுறை படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் 06.04.2013 சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டம் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடந்தது. பாமக முன்னணி நிர்வாகிகள் உட்பட பாட்டாளி மக்கள் கட்சியினர், பெண்கள் மற்றும் மதுவுக்கு எதிரானவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment