பா.ம.க. நிறுவனர் மருத்துவர்
இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கோடி வன்னியர்கள் கூடும்
வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு பெருவிழா வரும் 25-ம் தேதி மாமல்லபுரத்தில்
நடைபெறுகிறது. இவ் விழாவில் உத்தரப்பிரதேச முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின்
மூத்த தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொள்ளவிருந்தார்.
ஆனால், வரும் 25-ம் தேதி
உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மிக முக்கியமான நிகழ்ச்சியில்
பங்கேற்கவேண்டியிருப்பதால் அவரால் அன்று வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு
பெருவிழாவில் கலந்து கொள்ள இயலவில்லை. எனினும் மிகச் சிறப்பாக ஏற்பாடு
செய்யப்பட்டிருக்கும் இந்த விழாவில் ஏதேனும் ஒரு வகையில் தாமும் பங்கேற்க வேண்டும்
என்பதில் ஆர்வமாக இருக்கும் அகிலேஷ் யாதவ், வரும் 22ம் தேதி நடைபெறவிருக்கும்
வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு கலாச்சார விழாவை தொடங்கிவைக்க விருப்பம்
தெரிவித்துள்ளார்.
இதற்காக 22-ம் தேதி காலை 10.30
மணிக்கு சென்னை வரும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் அகிலேஷ்யாதவுக்கு விமான
நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதை தொடர்ந்து அன்று காலை 11 -மணிக்கு சென்னை கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ
பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள ஹோட்டல் ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் நடைபெறும்
வன்னிய இளைஞர் சித்திரை முழு நிலவு கலாச்சார விழாவை அவர் தொடங்கி வைத்து, வன்னிய
இளைஞர்களிடையே உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் நான், பாட்டாளி இளைஞர் சங்கத்
தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாசு, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத்
தலைவர் ஜே. குரு, பா.ம.க. பொதுச்செயலளார் வடிவேல் இராவணன், முன்னாள் நடுவண்
அமைச்சர்கள் அரங்க. வேலு, ஏ.கே. மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் மற்றும் பா.ம.க.,
வன்னியர் சங்கம் ஆகியவற்றின் மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களும்
பங்கேற்கின்றனர். பாட்டாளி இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த 1000 இளைஞர்களும் வெள்ளை
சீருடையில் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.
இதைத் தொடர்ந்து நண்பகல் 12-
மணிக்கு அதே விடுதியில் நானும் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க
உள்ளோம்.
கோடி வன்னியர்கள் கூடும் வன்னிய
இளைஞர் பெருவிழா ஏற்கனவே அறிவித்தபடி, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதைப்போல, வரும்
25-ந் தேதி சித்திரை முழு நிலவு நாளில் மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பான முறையில்
நடைபெறும். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment