"நாங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல; அவர்களுடன் சமுதாய நல்லிணக்கத்துடன் வாழ விரும்புகிறோம்' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
பா.ம.க. சார்பில் மாமல்லபுரத்தில் சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:
நாட்டிலேயே இளைஞர்களுக்கு கடந்த 32 ஆண்டுகளாக நல்வழி உறுதிமொழியை வழங்கி வரும் ஒரே கட்சியாக பா.ம.க. உள்ளது. ஒற்றுமையாகவும், வன்முறை, தீவிரவாதம், பெண்ணாசை இன்றியும், மது, புகை, சூதாட்டத்துக்கு அடிமையாகாமலும் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இளைஞரிடமும் உறுதிமொழி பெற்று வருகிறோம்.
வறுமை நீங்க, நாடு உயர, குடும்பம் உயர நல்வழியில் நடப்போம் என்று தொடர்ந்து உறுதிமொழி எடுத்து வருகிறோம்.
இது தொடர்பாக இளைஞர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் அளிக்கிறோம். இந்த நடைமுறை வேறு கட்சிகளில் உள்ளதா?
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி திருமண வயதை எட்டாத சிறுமிகளின் வாழ்க்கை ஒருசிலரால் சீரழிக்கப்படுகிறது. இதை பாதிக்கப்பட்ட பெற்றோர்களும், நாங்களும் எடுத்துக் கூறினால் ஜாதி வெறியைத் தூண்டுவதாக காவல்துறை எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. தமிழகத்தில் அனைத்து சமுதாய மக்களும் இச்சட்டத்தை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். நாங்கள் சட்டத்தை நீக்கச் சொல்லவில்லை. அதில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும், முறையாக பயன்படுத்த வேண்டும் என்றுதான் கூறுகிறோம்.
14, 15 வயது சிறுமிகளைக் காணவில்லை என்று புகார் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. தவறு செய்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தவறுகள் தடுக்கப்படும். காவல்துறையின் மெத்தனமே இதுபோன்ற தவறுகளுக்குக் காரணம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. அவர்களுடன் சமுதாயத்தில் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்.
காதல் நாடகம் என்ற பெயரில் பணம் பறிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காதல் புனிதமானது என்ற ஒரு சிலர் கூறுகின்றனர். நாங்கள் காதலை எதிர்க்கவில்லை. 21 வயதுக்கு பின் காதலித்தால் அது காதல். ஆனால், 12, 13, 15 வயது பெண்களை காதல் என்ற பெயரில் பலாத்காரம் செய்வது எந்த வகையில் நியாயம்?
தமிழகம் அமைதிப்பூங்காவாக மாற அனைத்து சமுதாய மக்களிடம் காவல்துறை பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார் ராமதாஸ்.
நிகழ்ச்சியில் பா.ம.க. தலைவர் கோ.க. மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அன்புமணி ராமதாஸ், வேலு, ஏ.கே. மூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
Thursday, April 25, 2013
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:

No comments:
Post a Comment