Friday, April 26, 2013

கலவரத்துக்கு காரணமான விடுதலை சிறுத்தைகள் மீது கடும் நடவடிக்கை தேவை

சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் பங்கேற்ற வந்தவர்கள் மீது மரக்காணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாமகவை சேர்ந்த இருவர் பலியாயினர், பலர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்தனர்.

மாமல்லபுரம் விழாவில் பங்கேற்க வந்த மத்திய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மரக்காணம் அருகே சாலையோர நிழலில் அமர்ந்து உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அவர்களை வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த இன்னொரு கும்பலும் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கொடூரமான தாக்குதலை நடத்தியதுடன், அந்த வழியே வந்து கொண்டிருந்த வன்னியர்களின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளனர்.

மற்றொரு கும்பல் அரசு பஸ்கள் உள்ளிட்ட 6 வாகனங்களையும் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு, அந்தப் பழியை மாநாட்டிற்கு வந்தவர்கள் மீது போட்டுள்ளனர். அவ்வழியே வந்தவர்கள் அனை வரும் வெளியூர்களைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு மரக்காணம் பகுதியை பற்றி எதுவுமே தெரியாது. அவ்வாறு தெரிந்திருந்தால் அவர்கள் அங்கு நின்றிருக்கவும் மாட்டார்கள்; வன்முறை கும்பலின் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆனால், திட்டமிட்டு தாக்குதலை நடத்திய கும்பல் பழியை அப்பாவிகள் மீது போட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிலைமை கட்டுப்படுத்தாமல், வெளியூரிலி ருந்து மாநாட்டிற்காக வந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 4 பேர் காயமடைந்துள்ளனர். வன்முறை கும்பலின் தாக்குதலில் காயமடைந்த தஞ்சையை சேர்ந்த விவேக் என்ற இளைஞரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்ற இளைஞரும் உயிரிழந்துவிட்டனர். ஆனால், இவர்கள் விபத்தில் இறந்ததாக கூறி வழக்கை முடித்து, வன்முறையாளர்களைக் காப்பாற்ற காவல்துறை முயல்கிறது.

இந்த வன்முறைகள் அனைத்தும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. போலீசார் நிலைமையை சரியாக கையாளாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைகள் குறித்தும், இதை காவல்துறை கையாண்ட விதம் குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு நீதி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலை சிறுத்தைகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த தவறும் செய்யாத பாமகவினர் 1,050 பேர் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: பாமக நிறுவனர் ராமதாசுக்கும் அவரது வீட்டுக்கும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 4 பேர் மற்றும் ஆயுதப்படை போலீசார் 3 பேர் என 7 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.நேற்று காலை ராமதாசுக்கு வழங் கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: