தமிழகத்தில் மருத்துவப்
படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று பா.ம.க
நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள
மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்காக 2013-14ம் ஆண்டு முதல் முதல்
தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு
அறிவித்திருக்கிறது. தேர்வுக்கான அறிவிப்பையும் வெளியிடப்பட்டிருப்பதால்,
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு
நடத்தப்படும் ஆபத்து உருவாகியிருக்கிறது.
மத்திய அரசின்
கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு மருத்துவக்
கல்லூரிகளில் அனைத்திந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்படும் 15% இடங்கள்
ஆகியவற்றுக்கு மட்டுமே அனைத்திந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு என்ற பெயரில்
தேசிய அளவில் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இது தொடர்பாக தமிழக
முதலமைச்சரும் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2013-14ம் ஆண்டு நுழைவுத்தேர்வு நடத்துவதற்காக அமர்த்தப்பட்டிக்கும் அமைப்பான, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள 355 மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும்,136 பல் மருத்துவக் கல்லூரிகளில் பி.டி.எஸ். படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் 5ம் தேதி தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தபடும் என்று தெரிவிக்கபட்டிக்கிறது.
தமிழகத்தில் நுழைவுத்தேர்வை ரத்து செய்வதற்கான சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இப்படி ஒரு நுழைவுத்தேர்வை அறிவிப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதற்கு சமமானதாகும். எனவே, மருத்துவ பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்விலிருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும். அவ்வாறு விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வராவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகி தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அதைக் கண்டித்து, தமிழகத்தில் மிகக் கடுமையான போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment