பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விலைவாசி
உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டீசல் விலை
லிட்டருக்கு ரூ. 5 உயர்த்தப்பட் டிருப்பதால், அரிசி, காய்கறி உள்ளிட்ட
அனைத்து வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன.
ஒவ்வொரு
குடும்பத்திற்கும் இனி ஆண்டு 6 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படும்
என்பதும் மிகவும் பிற்போக்குத்தனமான நடவடிக்கை ஆகும். இதனால் விறகு, கரி
போன்ற சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் எரிபொருள் ஆதாரங்களை தேடிச் செல்லும்
நிலைக்கு மக்கள் தள்ளப்படுவர்.
|
எனவே டீசல் விலை உயர்வு,
சயைமல் எரிவாயு சிலிண்டர்கள் மீதான கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டிற்கு அனுமதி போன்ற மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை
திரும்பப்பெற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் சென்னையில் நாளை (புதன்கிழமை)
மாலை 4 மணிக்கு தொடர் முழக்க போராட்டம் நடைபெறும்.
இப்போராட்டத்திற்கு
நான் தலைமை ஏற்கிறேன். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இடது சாரிகள் உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை மறுநாள் (20-ந்தேதி) பொது வேலை
நிறுத்தத்திற்கும் பா.ம.க. முழு ஆதரவு அளிக்கும். ஆங்காங்கே நடைபெறும்
போராட்டங்களில் பா.ம.க. வினரும் கலந்து கொள்வார்கள்’’ என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment