திருவண்ணாமலை மாவட்டம்
போளூர் நகரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்
கலந்துகொண்டார். போளூர் அண்ணா சிலையில் இருந்து கோரிக்கை பேரணி தொடங்கி
தாலுகா அலுவலகம் முடிவடைந்தது. அங்கு பேசிய ராமதாஸ்,
வன்னியர் சங்கம்
தொடங்கப்பட்டு 7 ஆண்டுகள் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு போராட்டம்
நடத்தப்பட்டது. அப்போது மாநில அரசு போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச் சூடு
நடத்தியது. இதில் 21 பேர் உயிரிழந்தனர். அதன்பின் வந்த திமுக அரசு
நியாயத்தை புரிந்துகொண்டு 107 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியாக
பட்டிய-ட்டு 20 சதவீதம் இடஒதுக்கீடு தந்தது. இதன் மூலம் வன்னியர்களுக்கு
7ல் இருந்து 8 சதவீதம்தான் இடஒதுக்கீடு கிடைக்கிறது. 7 கோடி பேர் வசிக்கும்
தமிழகத்தில் இரண்டரை கோடி வன்னியர்களுக்கு இந்த அரசாங்கங்கள் துரோகம்
இழைத்துள்ளன.
எங்களுடைய நோக்கம் தனிஇடஒதுக்கீடு தேவை என்பதே. மீண்டும் ஒரு போராட்டத்தை 25 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் துவங்கி உள்ளோம். தற்போது அறவழியில் நடக்கும் போராட்டத்தை உணர்ந்து எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டு சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார்.
இதேபோல் வந்தவாசியில்
நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் செல்வக்குமார் கலந்துகொண்டு சிறப்புரை
ஆற்றினார். அதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment