Tuesday, April 3, 2012

அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய கோரி ஆர்ப்பாட்டம்: ராமதாஸ்

மின் கட்டண உயர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:


இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 7874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை தமிழக அரசு கடந்த வாரம் உயர்த்தியதை. இதைக் கண்டித்து பாமக நாளை மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இதையடுத்து மின்சார கட்டணத்தை ஓரளவு குறைப்பதாக இன்று அரசு அறிவித்துள்ளது.


ஒட்டகத்தின் மீது டன் கணக்கில் சுமைகளை ஏற்றிவைத்துவிட்டு, கடைசியில் அதை ஏமாற்ற ஓரிரு தகர டின்களை மட்டும் இறக்கிவைப்பது போன்றுதான் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.


ரூ.7874 கோடி அளவுக்கு மின்கட்டணத்தை உயர்த்திய அரசு வெறும் ரூ 740 கோடிக்கு மின்கட்டணத்தை குறைத்துள்ளது. இந்த ஏமாற்றும் தந்திரம் இனியும் எடுபடாது.


அறிவிக்கப்பட்ட கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். இதை வலியுறுத்தி பாமக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும், வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் நாளை காலை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: