Sunday, April 8, 2012

உதயகுமாருக்கு பாமக கண்டனம்

கூடங்குளம் அணுமின்நிலையத்தை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்தநிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ள கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அழைத்துள்ளார். இதற்கு பா.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் வியனரசு நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசியபோது,

’’கூடங்குளம் அணு உலை போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் கருத்துகள் அணு உலை எதிர்ப்பாளர்கள்,

தமிழ் இன உணர்வாளர்களிடம் பெரும் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் கேரள மாநில முன்னாள் முதல்வர் அச்சுதானந்தனை இடிந்தகரைக்கு அழைத்துள்ளார்.


அச்சுதானந்தன் சார்ந்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணு உலைக்கு ஆதரவாக உள்ளது. அக்கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் அணு உலைக்கு ஆதரவாக பேசி வருகிறார்.

அச்சுதானந்தன் பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளார். எனவே அவர் இடிந்தகரைக்கு வருவதை எதிர்க்கிறோம். அச்சுதானந்தனை கூடங்குளம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: