Sunday, April 29, 2012

அன்புமணி அரசியல் செல்வாக்கை தடுக்க வேண்டுமென்றே ஜோடித்து உள்ளனர்: ராமதாஸ்

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மத்திய பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியது அகில இந்திய மருத்துவ கவுன்சில் 2 வது ஆண்டு அதை புதுப்பிக்காததால் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதை தொடர்ந்து 30 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அந்த குழு அனுமதி வழங்க முடிவு செய்தது. அதில் இடம் பெற்றிருந்த 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கையெழுத்து போட்டு இருக்கிறார்கள். அதன் பிறகுதான் அன்புமணி கையெழுத்திட்டு இருக்கிறார். இதில் அன்புமணி எந்தவிதமான முறைகேட்டிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கை சட்டரீதியாக சந்தித்து அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்போம். வளர்ந்து வரும் அவரது அரசியல் செல்வாக்கை தடுப்பதற்காக வேண்டுமென்றே இந்த வழக்கை ஜோடித்து உள்ளனர். இதற்கு பின்னணி யார்? என்பது தெரியும். அதைப்பற்றி நேரம் வரும்போது வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: