Friday, April 6, 2012

தமிழ் தேசியத்தை கட்டமைக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும்.:ராமதாஸ்

"தமிழ்நாடு தமிழருக்கே' என்ற தலைப்பிலான குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை மக்கள் மாநாடு கட்சித் தலைவர் சக்திவேல் தயாரித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசிய பொதுவுடைமை கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், திரைப்பட இயக்குநர் வீ.சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


விழாவில் குறுந்தகடை வெளிட்டு பேசிய ராமதாஸ்,


தமிழை அழிக்கும் முயற்சியில் ஊடகங்கள் இறங்கியுள்ளன. ஒருவர் பத்து வார்த்தைகள் பேசினால் அதில் 8 ஆங்கில வார்த்தைகளாக உள்ளன. ஆங்கில மொழியால் தமிழ் சிதைகிறது.


இலக்கணம் என்று ஒரு படம் எடுத்தேன். ஆங்கிலக் கலப்பு இல்லாமல் முழுமையும் தமிழ் வசனங்களாகவே இடம்பெற்ற திரைப்படம் அது. ஆனால் அது 5 நாள்கள் கூட ஓடவில்லை.


எனவே, மொழியைக் காக்க, தமிழ் தேசியத்தை கட்டமைக்க தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு அந்த அமைப்பு இருக்க வேண்டும். நான் முன் நின்று ஒருங்கிணைத்தால் ஏதோ அரசியல் ஆதாயத்துக்காக செய்வதுபோல இருக்குமோ என்ற தயக்கம் இருக்கிறது. இருப்பினும் தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: