Sunday, April 22, 2012

மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ்

மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள்ளார்கள்: அன்புமணி ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியின் பாட்டாளி இளைஞர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழக மாணவர்கள் சங்கம், வன்னிய இளைஞர் படை என 4 அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பயிற்சி கூட்டம் 22.04.2012 அன்று மாலை விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்க சமூதாய கூடத்தில் நடை பெற்றது. கூட்டத்தில் மாநில பா.ம.க. இளைஞர் சங்க தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியு மான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது: இந்த நிகழ்ச்சி வித்தியாச மான நிகழ்ச்சியாகும். நீங்கள் பதவியேற்கும் விழா நிகழ்ச்சி யாகும். உங்களுக்கு டாக்டர் ராமதாஸ் பதவி கொடுத்துள்ளார். இன்று உங்கள் ஊரில் பதவி ஏற்கும் நீங்கள் நாளை உள்ளாட்சி பிரதிநிதி களாகவோ, எம்.எல்.ஏ., எம்.பி.க்களாகவோ, ஏன் மந்திரி களாககூட வர வாய்ப்பு உள்ளது. டாக்டர் ராமதாஸ் இனி வரும் காலத்தில் திராவிட கட்சிகளுடனோ, தேசிய கட்சிகளுடனோ கூட்டணி கிடையாது என்று கூறியுள்ளார். பா.ம.க. தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும். 1920 ம் ஆண்டில் இருந்து இன்று வரை 27 முதல் அமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்டுள்ளனர். அதில் ஒருவர் கூட வன்னியர் சமூதாயத்தை சேர்ந்தவர் இல்லை. மைக்ரோஸ்கோப் சமூதாயத்தை சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை ஆண்டு உள் ளார்கள். திராவிட கட்சிகளின் சாதனை சாராயம், சினிமா, இலவசம்தான். தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கை அமல் படுத்துவதற்குதான். கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சினிமா துறையை சேர்ந்தவர்கள்தான் முதல் அமைச்சர்களாக உள்ளனர். கேரளாவிலோ, கர்நாடகாவிலோ இது கிடையாது. இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: