Monday, April 9, 2012

கூடன்குளம் அணு உலையை ராஜபக்சே எதிர்த்தால் ஏற்றுக்கொள்வாரா உதயகுமார் : பாமக கேள்வி

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைச் சந்திப்பதற்காக கேரளாவின் முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் வரும் 12ந் தேதி வரஉள்ளார்.

இதுகுறித்து பா.ம.க.வின் மாநில துணை பொ.செ.வான வியனரசு நெல்லையில் நிருபர்களுக்கு அளத்த பேட்டியில்,

’’குமரி மாவட்டம் நெய்யாறு இடதுகரை கால்வாயில் தண்ணீர் கிடைக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாழ்பட்டுக் கிடப்பதற்கு கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தனின் நடவடிக்கையே காரணம் . அதோடு இன்றைக்கு முல்லைப்பெரியாறு அணை இழப்புகளையும்,பாதிப்புகளையும் சந்திக்க அச்சுதானந்தனின் குறுகிய மனப்பான்மையும்,மனித நேய மற்ற போக்கும் தான் காரணம்.



தமிழர்கள் என்றால் வேப்பங்காயாகவே கசக்கும் மன எண்ணம் உள்ள அச்சுதானந்தன் ஆடு நனைகிறதே என்று ஒணான் அழுத கதையாக இன்று கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களைப் பார்க்க வருவது தமிழர்கள் ஏற்கத்தக்கதல்ல.

அணு உலைக்கெதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரின் அண்மைக்கால செயல்பாடுகளும்,அவர் வெளியிடும் கருத்துக்களும் உண்மையான எதிர்ப்பாளார்கள் தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்திற்குள் அச்சுதானந்தனை அனுமதிப்பது குழப்பத்தை ஏற்படுத்தும்.


இலங்கையின் சுற்றுச்சூழல் நீதிக்கான நடுவத்தின் இயக்குனர் கேமந்த வித நாயக்கே, கூடங்குளம் அணு உலையை இலங்கை அரசு எதிர்க்க வேண்டுமென அதிபர் ராஜபக்சேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதை ஏற்று நாளைக்கே ராஜபக்சே இடிந்தகரை வந்து போராடும் மக்களுக்கு ஆதரவு தருகிறோம் என்றால் உதயகுமார்,புஸ்பராயன்,ஏற்றுக் கொள்வார்களா.தமிழகம் தான் அனுமதிக்குமா? எனவே அச்சுதானந்தன் வருகையை பா.ம.க. கண்டிக்கிறது’’ என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: