சென்னை: வன்னியர் சமுதாயத்தைப் பற்றி இழிவாக செய்தி வெளியிட்டதற்காக ‘தினமலர்’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதன் வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ புகார் செய்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் வன்னியர் சங்க மாநில தலைவராகவும், ஜெயங்கொண்டம் எம்எல்ஏவாகவும் உள்ளேன். வன்னியர் சங்கம், டாக்டர் ராமதாஸை நிறுவனராக கொண்டு செயல்பட்டு வருகிறது. வன்னியர் சமூகத்தின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்துக்காக எங்கள் சங்கம் பாடுபட்டு வருகிறது. தமிழகத்தில் வன்னியர்கள் தனி பெரும் சமூகத்தினராக உள்ளனர். ஆனால், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, வெளியீட்டாளர் லட்சுமிபதி ஆகியோரால் நடத்தப்படும் தினமலர் நாளிதழில் கடந்த 29ம் தேதி சென்னை பதிப்பின் 2ம் பக்கத்தில் Ôவாழ்வாதாரத்தை உயர்த்த இப்படியும் ஐடியாÕ Ôகவுண்டர்களாக மாறிவரும் வன்னியர்கள்Õ என்ற தலைப்பில் உண்மைக்கு புறம்பான, அவதூறான இருபிரிவினரிடையே பகைமையை தூண்டும் வகையிலும் மற்ற சமூகத்தினரிடம் வன்னியர் சமூக மக்களை தாழ்த்தி, தனிமைப்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் வன்னியர் சமூக மக்களை அவமதிக்கும் விதத்திலும் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் ஒரு கட்டுரையை திட்டமிட்டு, வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் வெளியிட்டுள்ளனர்.
அந்தக் கட்டுரையில், ‘வன்னியர்கள் பிற சமூகத்தினர் மத்தியில் பழகுவதை தவிர்த்து, குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்திக் கொள்வர். வன்னியர்கள் வறுமை காரணமாக சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட காலமும் உண்டு, சமூகத்தில் தங்களை மேம்படுத்தி கொண்டவர்களாக உயர்த்திக் கொண்டாலும், இன்றளவும் அவர்கள், வம்புக்கும்(சண்டைக்கும்) அடாவடிக்கும் (அடக்குமுறைக்கும்) பெயர் போனவர்கள் என்ற எண்ணம் பிற சமூகத்திடம் உள்ளது.
அதன் காரணமாக வன்னியர்கள் என்றால் அவர்களிடம் வரவு, செலவு, கொடுக்கல் வாங்கல் கூடாது என்பதை எழுதப்படாத விதியாக பிற சமூகத்தினர் கடைபிடிக்கிறார்கள். தொழில் ரீதியான பாதிப்புகளை தவிர்க்கும் வகையில் தங்களை கவுண்டர் என சமூகத்தில் அறிமுகம் செய்து கொண்டு வலம் வருகின்றனர்.
கவுண்டர் என வலம் வரும் வன்னியர்கள் தற்போது தங்களை கொங்கு வேளாள கவுண்டர் என மாற்றிக் கொள்ளவும் துவங்கி விட்டனர். இது வன்னியர் மற்றும் கவுண்டர் சமூகத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்தி வெளியிட்டு வன்னிய மக்களை அவமதித்து வன்னியர், கவுண்டர் சமூகத்தினரிடையே தவறான எண்ணத்தை பரப்பி கருத்து வேறுபாட்டையும், சாதி மோதலையும், தினமலர் நாளிதழ் திட்டமிட்டு உருவாக்கியுள்ளது. அதோடு அதன் இணையதளத்திலும் இக்கட்டுரையை மேற்படி கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் செய்தியினால் இரு சமூகத்தினரிடையே பிரிவினையும், வன்முறையும் ஏற்படும் சூழல் உள்ளது. எதிர்காலத்திலும் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோர் தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவார்கள் என உறுதியாக நம்புகிறேன். எனவே சட்டத்துக்கு விரோதமாக, உண்மைக்கு புறம்பாக, அவதூறாக செய்தி வெளியிட்ட மேற்படி எதிரிகளால் நடத்தப்படும் தினமலர் நாளிதழை தடை செய்யும்படியும், மேற்படி கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் ஜெ.குரு கூறியுள்ளார்.
பாமக தலைவர் ஜி.கே.மணி நேற்று அளித்த பேட்டி:
வன்னியர் சமூகத்தை பற்றி தினமலர் பத்திரிகையில் அவதூறாக கொச்சைப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். எங்கள் மேல் அவர்களுக்கு என்ன காழ்ப்புணர்ச்சி என்று தெரியவில்லை. எங்கள் சமூகத்தை சேர்ந்த பலர் பல்வேறு கட்சிகளில் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் கொதித்துப் போயுள்ளனர். போனில் தொடர்பு கொண்டு, ‘மெஜாரிட்டி சமூகத்தினரான வன்னியர்களை கொச்சைப்படுத்தி தொடர்ந்து செய்தி வெளியிடும் தினமலர் நிர்வாகிகளான கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி ஆகியோரை உடனே கைது செய்து சிறையில் அடைக்கும் வரை போராட வேண்டும்’ என எங்களை வலியுறுத்தி வருகிறார்கள். எங்கள் சமூகத்தினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தினர். அப்படிப்பட்ட எங்களை பற்றி தினமலர் பத்திரிகையில் தவறாக எழுதியுள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதியை கைது செய்ய வேண்டும். எங்கள் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதி அளித்துள்ளார். இவ்வாறு ஜி.கே.மணி கூறினார். இப்பேட்டியின் போது வன்னியர் சங்க மாநில தலைவர் ஜெ.குரு எம்எல்ஏ, பாமக வக்கீல்கள் சங்கத் தலைவர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
Friday, February 3, 2012
தினமலர் கிருஷ்ணமூர்த்தி, லட்சுமிபதி மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment