Sunday, February 19, 2012

பா.ம.க. தனித்துப்போட்டி : ஜி.கே.மணி

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி இன்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘’இந்தியாவில் உள்ள மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயில மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவு தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் இந்தி மொழியை தாய்மொழியாக கொண்ட 9 மாநில மாணவர்கள் எளிதில் சேர முடிகிறது.



தமிழகத்தில் 2 விழுக்காடு மாணவர்கள் கூட மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களில் நுழைய முடிவதில்லை. எனவே ரெயில்வே தேர்வு போன்று இந்த நுழைவு தேர்வினையும் இந்தி, ஆங்கிலம், உருது, மற்றும் அந்தந்த மாநில தாய் மொழிகளில் நடத்தப்பட வேண்டும். மின்வெட்டு மின்வெட்டின் காரணமாக ஒட்டுமொத்த தமிழகமும் ஸ்தம்பித்து போய் உள்ளது.









இதற்கு மின்வெட்டு நேரத்தை மாற்றி அமைப்பதால் எந்த தீர்வும் ஏற்படாது. தற்காலிக தீர்வாக மத்திய தொகுப்பில் இருந்து தமிழக முதலமைச்சர் கூடுதல் மின்சாரத்தை கேட்டு பெற வேண்டும்.

பிற மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும். முதலமைச்சர் கேட்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தை பிரதமர் தமிழகத்திற்கு உடனே வழங்க வேண்டும்.



இதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்க கூடாது. கூடங்குளம் அணுமின் நிலையம் மனித உயிர்களுக்கு நிலைத்த கேடு விளைவிக்கும் திட்டம்.

எனவே அதை மூடிவிட்டு நீர்மின் திட்டம் போன்ற குறைந்த செலவில் ஆபத்தில்லாத மின்திட்டங்களை மத்திய- மாநில அரசுகள் தொடங்க வேண்டும். சங்கரன்கோவில் இடை தேர்தலில் பா.ம.க. போட்டியிடவில்லை. 1996-ல் பா.ம.க. தனித்து போட்டியிட்டு 4 சட்டமன்ற தொகுதிகளையும், 42 தொகுதிகளில் 2-வது இடத்தையும் பிடித்தது.



அதன்பின்னர் பா.ம.க. தனித்துவத்துடன் இயங்காமல் திராவிட கட்சிகளுடன் கூட்டணி அமைத்ததால் தேர்தலில் சாவை சந்திக்க நேரிட்டது. தனித்து போட்டி எனவே வருகிற பாராளு மன்ற தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடும். இதற்கிடையே ஒத்த கட்சிகள் வந்தால் பா.ம.க. தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.



தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை என சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆகவே காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். சட்ட மன்ற மரபுபடி சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் அதிக நேரம் பேச வாய்ப்பளிக்க வேண்டும். எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குகள் போட கூடாது’’என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: